இந்திய வீரர்களுக்கு மட்டுமில்ல.. எங்க எல்லாருக்குமே தோனி தான் குருநாதர்.. தோனியின் பாணியில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர்.. வீடியோ

By karthikeyan VFirst Published Nov 11, 2019, 11:04 AM IST
Highlights

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என இங்கிலாந்து அணி வென்றது. 
 

முதல் 4 போட்டிகளில் இரு அணிகளுமே தலா 2 போட்டிகளில் வென்ற நிலையில், கடைசி போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, மார்டின் கப்டில், முன்ரோ மற்றும் டிம் சேஃபெர்ட்டின் அதிரடியால் 11 ஓவரில் 146 ரன்களை குவித்தது. கப்டில் 20 பந்தில் 50 ரன்களும் முன்ரோ 21 பந்தில் 46 ரன்களும் குவித்தனர். டிம் சேஃபெர்ட் 16 பந்தில் 39 ரன்களை விளாச, 11 ஓவரில் நியூசிலாந்து அணி 146 ரன்கள் அடித்தது. 

11 ஓவரில் 147 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி சரியாக 146 ரன்களை அடித்ததால் போட்டி டை ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் அடித்தது. 18 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்து தோற்றது. சூப்பர் ஓவரில் வென்ற இங்கிலாந்து அணி, 3-2 என டி20 தொடரையும் வென்றது. 

இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லரை தோனியின் பாணியில் ரன் அவுட் செய்தார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் சாம் பில்லிங்ஸ். இன்னிங்ஸின் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயன்றார் டெய்லர். சாம் கரன் வீசிய த்ரோவை பிடித்த சாம் பில்லிங்ஸ் தோனியை போலவே ஸ்டம்பை பார்க்காமலேயே அடித்து ரன் அவுட் செய்தார். தோனியை நினைவுபடுத்தும் பில்லிங்ஸின் ரன் அவுட் வீடியோ.. 

click me!