ஹர்திக் பாண்டியா ரொம்ப வீக்கா இருக்காரு.. அவரால் 4 ஓவர்கள் கூட பந்துவீசமுடியாது..!

Published : Dec 24, 2021, 03:30 PM IST
ஹர்திக் பாண்டியா ரொம்ப வீக்கா இருக்காரு.. அவரால் 4 ஓவர்கள் கூட பந்துவீசமுடியாது..!

சுருக்கம்

4 ஓவர்கள் கூட பந்துவீச முடியாத அளவிற்கு பலவீனமாக இருக்கும் ஹர்திக் பாண்டியா, கொஞ்சம் சதை போடுவது தான் அவருக்கு நல்லது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் அறிவுறுத்தியுள்ளார்.  

இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கபில் தேவுக்கு நிகராக பேசப்பட்டவர்/மதிப்பிடப்பட்டவர். அதிரடியான பேட்டிங், அருமையான பவுலிங், மிரட்டலான ஃபீல்டிங் என அனைத்திலும் வல்லவராக திகழ்ந்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியில் இடம்பிடித்த குறுகிய காலத்திலேயே அணியில் தனக்கென்று நிரந்தர இடத்தை பிடித்து, அணியின் முக்கியமான வீரராக உருவெடுத்தவர்.

இந்திய அணியின் முக்கியமான வீரராக ஜொலித்துக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிற்கு வினையாக அமைந்தது 2018 ஆசிய கோப்பை  தொடர். அந்த தொடரில் முதுகுப்பகுதியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா, அதன்பின்னர் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக ஆடவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வரவே அதிக காலம் எடுத்துக்கொண்ட பாண்டியா, அதன்பின்னரும் அடுத்தடுத்து சில காயங்களால் முழு ஃபிட்னெஸுடன் இல்லாமல் போனார்.

முழு ஃபிட்னெஸுடன் இல்லாததாலேயே அவரால் பவுலிங்கும் வீசமுடியாமல் போயிற்று. கடைசியாக இலங்கை சுற்றுப்பயணத்தில் பந்துவீசினார் ஹர்திக் பாண்டியா. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒரு ஓவர் கூட வீசவில்லை. 

ஆல்ரவுண்டராக டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீசாதது விமர்சனங்களுக்கு வித்திட்டதையடுத்து, அடுத்த சில போட்டிகளில் ஒருசில ஓவர்கள் வீசினார். ஆனால் அவரால் முன்புபோல் பந்துவீசமுடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியாவிற்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையில், அவர் இன்னும் முழு ஃபிட்னெஸை எட்டாததால், தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று முழு ஃபிட்னெஸை பெற்றால் மட்டுமே அவர் இனிமேல் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும். 3 விதமான ஃபார்மட்டுகளிலும் நிரந்தர வீரராக ஆடிவந்த ஹர்திக் பாண்டியா, இன்றைக்கு ஒரு ஃபார்மட்டில் கூட உருப்படியாக ஆடமுடியாமல் திணறிவருகிறார். ஐபிஎல்லிலும் அவர் ஆடிவந்த மும்பை இந்தியன்ஸ் அணி அவரை தக்கவைக்காமல் கழட்டிவிட்டது.

இந்நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்,  ஹர்திக் பாண்டியாவின் உடல் மிகவும் பலவீனமாக உள்ளது. அவரால் இப்போது ஒரு ஃபார்மட்டில் ஆடுவதே கஷ்டம். அவர் நல்ல டயட்டை பின்பற்றி, உடம்பில் கொஞ்சம் சதை போட வேண்டும். பாண்டியா கிரிக்கெட்டை விட்டு கொஞ்சம் விலகி, கடுமையாக பயிற்சி செய்தால்தான் அவரால் 4 ஓவர்கள் பந்துவீசமுடியும் என்று ரவி சாஸ்திரி அண்மையில் கூறியிருந்தார். இதன்மூலம் அவர் 4 ஓவர்கள் பந்துவீசுவதற்கே கஷ்டப்படுகிறார் என்பது தெரிகிறது என்று சல்மான் பட் கூறியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 1st T20: இந்தியா பேட்டிங்..! சஞ்சு சாம்சன், நம்பர் 1 ஸ்பின்னர் நீக்கம்! பிளேயிங் லெவன்!
ஐபிஎல் மினி ஏலம்.. 1005 வீரர்களை தூக்கி எறிந்த BCCI.. 350 வீரர்களுடன் லிஸ்ட் ரெடி