Harbhajan Singh: ஒருவழியாக ஓய்வு அறிவித்தார் ஹர்பஜன் சிங்.! அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு

Published : Dec 24, 2021, 03:14 PM IST
Harbhajan Singh: ஒருவழியாக ஓய்வு அறிவித்தார் ஹர்பஜன் சிங்.! அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு

சுருக்கம்

இந்திய அணியின் ஜாம்பவான் ஸ்பின்னரான ஹர்பஜன் சிங் அனைத்துவகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார்.  

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் 1998ம் ஆண்டு அறிமுகமானார் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங். சௌரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் சுழல் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுடன் இணைந்து இந்திய அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். கங்குலி மற்றும் தோனி தலைமையிலான இந்திய அணிகளில் முக்கிய அங்கம் வகித்தார்.

1998லிருந்து 2016ம் ஆண்டுவரை சர்வதேச கிரிக்கெட்டில்  ஆடிய ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை முறியடித்தார் அஷ்வின். 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

கடைசியாக 2016ம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடிய ஹர்பஜன் சிங், அதன்பின்னர் 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடவில்லை. ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே ஆகிய அணிகளுக்காக நிறைய ஆடிய ஹர்பஜன் சிங், கேகேஆர் அணியிலும் ஆடியிருக்கிறார்.

41 வயதாகிவிட்ட ஹர்பஜன் சிங்கிற்கு இனிமேல் ஐபிஎல்லிலும் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவர், அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.  கடந்த 5 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்றாலும், ஓய்வு அறிவிக்காமல் இருந்துவந்த ஹர்பஜன் சிங், இன்றைக்கு ஓய்வு அறிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!