#CPL2021 அரையிறுதி: 205 ரன்களை குவித்தது செயிண்ட் லூசியா கிங்ஸ்..! டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு கடின இலக்கு

By karthikeyan VFirst Published Sep 14, 2021, 9:39 PM IST
Highlights

கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் ஆடி 20 ஓவரில் 205 ரன்களை குவித்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, 206 ரன்கள் என்ற கடின இலக்கை நைட் ரைடர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

விறுவிறுப்பாக நடந்துவரும் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. செயிண்ட் லூசியா கிங்ஸ், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயிண்ட் கிட்ஸ்&நெவிஸ் பாட்ரியாட்ஸ் ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. செயிண்ட் கிட்ஸில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

செயிண்ட் லூசியா கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஆண்ட்ரே ஃப்ளட்சர்(4) மற்றும் கார்ன்வால்(0) ஆகிய இருவரும் சொதப்பினர். ஆனால் மார்க் டீயல் அதிரடியாக அடித்து ஆடி ஸ்கோரை அதிவேகமாக உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய டீயல், 44 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 78 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

ரோஸ்டான் சேஸ் 21 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 36 ரன்களும், டேவிட் வீஸ் 21 பந்தில் 34 ரன்களும் அடித்தனர். கடைசி நேரத்தில் காட்டடி அடித்த டிம் டேவிட், 17 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 38 ரன்களை விளாச, 20 ஓவரில் 205 ரன்களை குவித்த செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, 206 ரன்கள் என்ற கடின இலக்கை டிரின்பாகோ நைட் ரைடர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

click me!