இது ரொம்ப அநியாயங்க;பாவம் பவுலர்ஸ்.. கிரிக்கெட்டில் முக்கியமான விதி மாற்றத்தை பரிந்துரைத்த சச்சின் டெண்டுல்கர்

Published : Jan 08, 2022, 06:58 PM IST
இது ரொம்ப அநியாயங்க;பாவம் பவுலர்ஸ்.. கிரிக்கெட்டில் முக்கியமான விதி மாற்றத்தை பரிந்துரைத்த சச்சின் டெண்டுல்கர்

சுருக்கம்

பந்து ஸ்டம்ப்பை தட்டினாலே அவுட் கொடுக்க வேண்டும் என்ற வகையில் விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைத்துள்ளார்.  

சர்வதேச கிரிக்கெட்டில் காலத்திற்கு ஏற்ப விதி மாற்றங்களை செய்துவருகிறது ஐசிசி. டி.ஆர்.எஸ், அம்பயர்ஸ் கால் என பல விதிகள் காலத்திற்கு ஏற்ப கொண்டுவரப்பட்டுள்ளன. டி20 கிரிக்கெட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் கடைசி ஓவரின் முதல் பந்தை வீசவில்லை என்றால், அந்த ஓவர் முழுக்க 30 யார்டு வட்டத்துக்கு வெளியே இருக்கும் ஒரு ஃபீல்டரை வட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும் என்று கடுமையான தண்டனையை அமல்படுத்தி விதியை உருவாக்கியுள்ளது ஐசிசி.

இந்நிலையில், சச்சின் டெண்டுல்கர் புதிய விதி ஒன்றை பரிந்துரைத்துள்ளார். கிரிக்கெட்டில் பவுலர் வீசும் பந்து ஸ்டம்ப்பை தாக்கும்போது பெய்ல்ஸ் கீழே விழுந்தால் மட்டுமே அதற்கு அவுட் கொடுக்கப்படுகிறது. பந்து ஸ்டம்ப்பை தாக்கினாலும் பெய்ல்(ஸ்) கீழே விழவில்லை என்றால் அவுட் தரப்படமாட்டாது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையே சிட்னியில் நடந்துவரும் 4வது டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸுக்கு கேமரூன் க்ரீன் 140 கிமீ வேகத்தில் வீசிய பந்து ஆஃப் ஸ்டம்ப்பை தட்டிவிட்டு கீப்பரிடம் சென்றது. ஆனால் பெய்ல் கீழே விழாததால் ஸ்டோக்ஸுக்கு அவுட் கொடுக்கப்படவில்லை. 

அதைக்கண்டு அதிருப்தியடைந்த சச்சின் டெண்டுல்கர், இந்த விதி பவுலர்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் உள்ளதாகவும், பந்து ஸ்டம்ப்பை தாக்கினாலே அவுட் கொடுக்கும் வகையில் புதிய விதியை உருவாக்க வேண்டும் என்று டுவிட்டரில் பதிவிட்டு, ஷேன் வார்னை டேக் செய்தார்.

ஷேன் வார்ன் எம்சிசி உலக கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினராக இருந்துவருகிறார். எனவே அவரை டேக் செய்தார். உடனே சச்சினுக்கு ரிப்ளை செய்த ஷேன் வார்ன், சுவாரஸ்யமான பாய்ண்ட்.. கண்டிப்பாக விவாதிக்க வேண்டிய விஷயம். இதை உலக கிரிக்கெட் கமிட்டி கவனத்திற்கு கொண்டுசெல்கிறேன். பின்னர் உங்களுக்கு(சச்சின்) அப்டேட் செய்கிறேன் என்று பதிலளித்தார் ஷேன் வார்ன்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!