ரிவர்ஸ் ஸ்விங்கில் செம கெட்டிக்காரர்; ரிஸ்ட்டை வைத்து என்னையே ஏமாற்றியிருக்கார்..! பவுலருக்கு சச்சின் புகழாரம்

By karthikeyan VFirst Published Jul 10, 2020, 2:52 PM IST
Highlights

இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ரிவர்ஸ் ஸ்விங் கலையை விதந்தோதியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்துவருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் 4 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் தொடர் மீண்டும் நடக்கிறது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்கி நடந்துவருகிறது.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்துவரும் நிலையில், இந்த போட்டி மற்றும் ஆடும் வீரர்கள் குறித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா ஆகிய இருவரும் ஆன்லைனில் உரையாடிவருகின்றனர். 

அந்தவகையில், இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் ஆண்டர்சனின் ஸ்விங் பற்றி அலசினர். அப்போது ஜேம்ஸ் ஆண்டர்சனின் ரிவர்ஸ் ஸ்விங் கலையை சச்சின் டெண்டுல்கர் வெகுவாக புகழ்ந்து பேசினார். 

ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து அணியில் 2002ம் ஆண்டு அறிமுகமானார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2003ம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக ஆடிவருகிறார். இதுவரை 151 போட்டிகளில் ஆடி 584 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஃபாஸ்ட் பவுலர் ஆண்டர்சன் தான். 

இங்கிலாந்து அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரும், ஆல்டைம் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவருமானவர் ஆண்டர்சன். இந்நிலையில், ஆண்டர்சனின் ரிவர்ஸ் ஸ்விங் குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், நிறைய பேட்ஸ்மேன்கள் ஃபாஸ்ட் பவுலர்களின் ரிஸ்ட் நகர்வை பார்த்துத்தான் என்ன ஸ்விங் என்பதை கணிப்பார்கள். அப்படி ரிஸ்ட் நகர்வை பார்த்து ஆடும் பேட்ஸ்மேன்கள், ஆண்டர்சனிடம் ஏமாந்துவிடுவார்கள். 

ஏனெனில் ஆண்டர்சன், பந்தை ரிலீஸ் செய்யும்போது அவரது ரிஸ்ட்டை இன்ஸ்விங் வீசுவதுபோல காட்டி, ஆனால் ரிவர்ஸ் ஸ்விங் செய்வார். பந்து பிட்ச் ஆகி திரும்பும்போதுதான், அது ரிவர்ஸ் ஸ்விங் என்பது தெரியவரும். ஆனால் ரிஸ்ட்டை பார்த்து, இன்ஸ்விங் என நினைத்து பேட்ஸ்மேன்கள், அந்த பந்தை ஆடுவதற்கு கமிட் ஆகியிருப்பார்கள். ஆனால் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆவதால் சிக்கிக்கொள்வார்கள். அவர் அப்படி செய்தது எனக்கு வியப்பாக இருந்தது. பிற்காலத்தில் ஸ்டூவர்ட் பிராடும் அவ்வாறு வீசினார். ஆனால் ஆண்டர்சன் பல ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்ய தொடங்கிவிட்டார். ரிவர்ஸ் ஸ்விங்கில் ஆண்டர்சன் கெட்டிக்காரர் என்று சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டினார்.

click me!