ஆர்சிபியை ராஜஸ்தான் ராயல்ஸ் வீழ்த்த அந்த 2 வீரர்கள் தான் காரணம்.. பட்டைய கிளப்பிட்டானுங்க - சச்சின் பாராட்டு

By karthikeyan VFirst Published May 28, 2022, 8:05 PM IST
Highlights

2வது நாக் அவுட் போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்ற நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களை சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து பேசியுள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மே 29) நடக்கும் ஃபைனலில் குஜராத் டைட்டன்ஸூம் ராஜஸ்தான் ராயல்ஸும் மோதுகின்றன.

ஐபிஎல் 15வது சீசன் நாளையுடன்(மே 29) முடிகிறது. ஃபைனலுக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 2 அணிகளும் முன்னேறியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் தகுதிப்போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது. 

முதல் தகுதிப்போட்டியில் குஜராத்திடம் தோற்ற ராஜஸ்தான் அணி, 2வது தகுதிப்போட்டியில் ஆர்சிபியை வீழ்த்தி ஃபைனலுக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த சீசனில் அபாரமாக ஆடி ஃபைனலுக்கு முன்னேறியது.

ஆர்சிபிக்கு எதிரான வாழ்வா சாவா நாக் அவுட் போட்டியில் ஆர்சிபியை 157 ரனக்ளுக்கு கட்டுப்படுத்தியது ராஜஸ்தான் அணி. ஒபெட் மெக்காய் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, அஷ்வின், சாஹல் ஆகிய 4 பவுலர்கள் நன்றாக செட் ஆனாலும், 5வது பவுலரான ஒபெட் மெக்காயின் இடம் கேள்விக்குறியாகவே இருந்தது. அவர் அந்தளவிற்கு பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் அவரது இடத்தில் வேறொரு பவுலர் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீது நம்பிக்கை வைத்து ராஜஸ்தான் அணி அவரை இறக்கிவிட்டது.

தன் மீது வைத்த நம்பிக்கையை வீணடிக்காமல் அபாரமாக பந்துவீசி 23 ரன்கள்மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டையும் வீழ்த்தினார். அவரது பவுலிங் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிகரமாக இருந்தது. பிரசித் கிருஷ்ணா 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3விக்கெட் வீழ்த்தினார். 180-200  ரன்கள் வரை அடித்திருக்க வேண்டிய ஆர்சிபி அணியை 157ரன்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கட்டுப்படுத்த பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காயின் அபாரமான பவுலிங் தான் காரணம்.

அதைத்தான் சச்சின் டெண்டுல்கரும் சுட்டிக்காட்டி பாராட்டியுள்ளார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர்,  பிரசித் கிருஷ்ணாவுடன் ஒபெட் மெக்காய் முக்கியமான பவுலராக திகழ்ந்தார். இருவரும் இணைந்து ஆர்சிபி அணியை அழுத்தத்திலேயே வைத்திருந்தனர். ஆர்சிபி அணிக்காக பின்வரிசையில் நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடி போட்டிகளை  சிறப்பாக முடித்து கொடுத்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கை பிரசித் கிருஷ்ணா விரைவில் வீழ்த்தினார். அதன்பின்னர் ஹசரங்காவிற்கும் அருமையான பந்தை வீசினார். 157ரன்கள் அந்த குறிப்பிட்ட ஆடுகளத்தில் போதாத ஸ்கோர் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
 

click me!