சச்சின் தேர்வு செய்த ஆல்டைம் பெஸ்ட் லெவன்! டிராவிட், கும்ப்ளே, தோனி, கோலி இல்ல.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்

By karthikeyan VFirst Published Jan 8, 2022, 3:45 PM IST
Highlights

ஆல்டைம் பெஸ்ட் லெவனை தேர்வு செய்துள்ளார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் சிறந்த வீரர்களில் ஒருவர் சச்சின் டெண்டுகர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களுடன் 34,357 ரன்களை குவித்து தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்பவர் சச்சின் டெண்டுல்கர். 

ஆல்டைம் தலைசிறந்த வீரர்களில் முதன்மையானவரான சச்சின் டெண்டுல்கர், ஆல்டைம் சிறந்த லெவனை தேர்வு செய்துள்ளார். தனது ஆல்டைம் சிறந்த லெவனின் தொடக்க வீரர்களாக முன்னாள் இந்திய லெஜண்ட் பேட்ஸ்மேனான கவாஸ்கர் மற்றும் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார்.

3 மற்றும் 4ம் வரிசைகளில் முறையே வெஸ்ட் இண்டீஸின் லெஜண்ட் பேட்ஸ்மேன்களான பிரயன் லாரா மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்த சச்சின் டெண்டுல்கர், 5ம் வரிசை வீரராக ஆல்டைம் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜாக்  காலிஸையும், 6ம் வரிசை வீரராக தனது பேட்டிங் பார்ட்னரான சௌரவ் கங்குலியையும் தேர்வு செய்துள்ளார் சச்சின்.

விக்கெட் கீப்பராக ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட்டையும், ஸ்பின்னர்களாக ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் மற்றும் இந்தியாவின் ஹர்பஜன் சிங் ஆகிய இருவரையும், ஃபாஸ்ட் பவுலர்களாக வாசிம் அக்ரம் மற்றும் க்ளென் மெக்ராத் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார் சச்சின்.

ஆல்டைம் பெஸ்ட் சுழல் ஜாம்பவானும், டெஸ்ட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியவருமான முத்தையா முரளிதரனை தனது பெஸ்ட் லெவனில் எடுக்கவில்லை சச்சின். ராகுல் டிராவிட், தோனி, கோலி ஆகிய வீரர்களையும் தனது சிறந்த லெவனில் சச்சின் தேர்வு செய்யவில்லை. அவரது காலக்கட்டத்தில் அவருடன் இணைந்து நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கும் முன்னாள் சுழல் ஜாம்பவனான அனில் கும்ப்ளேவையும் சச்சின் தேர்வு செய்யவில்லை.

சச்சின் டெண்டுல்கரின் ஆல்டைம் பெஸ்ட் லெவன்:

வீரேந்திர சேவாக், சுனில் கவாஸ்கர், பிரயன் லாரா, விவியன் ரிச்சர்ட்ஸ், ஜாக் காலிஸ், சௌரவ் கங்குலி, ஆடம் கில்கிறிஸ்ட் (விக்கெட் கீப்பர்), ஷேன் வார்ன், வாசிம் அக்ரம், ஹர்பஜன் சிங், க்ளென் மெக்ராத்.
 

click me!