காயத்தால் அவதிப்பட்ட விராட் கோலியின் ஃபிட்னெஸ் அப்டேட்..! உண்மையை உடைத்த ராகுல் டிராவிட்

By karthikeyan VFirst Published Jan 7, 2022, 10:36 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலியின் ஃபிட்னெஸ் குறித்த அப்டேட்டை தெரிவித்துள்ளார் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். 
 

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் நிலையில், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட்டில் தோல்வியடைந்தது. தென்னாப்பிரிக்காவின் கோட்டையான செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி, 2வது டெஸ்ட் போட்டியில் ஜோஹன்னஸ்பர்க்கில் முதல் முறையாக தோல்வியை தழுவியது.

2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சரியில்லை. 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. தொடரின் முடிவை கேப்டவுனில் நடக்கும் கடைசி டெஸ்ட் தான் தீர்மானிக்கும்.

முதல் டெஸ்ட்டில் ஆடிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 2வது டெஸ்ட்டில் காயம் காரணமாக ஆடவில்லை. அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 2வது டெஸ்ட்டில் கேப்டன் விராட் கோலி களத்தில் இல்லாததன் பின்னடைவை இந்திய அணி உணர்ந்தது. விராட் கோலி களத்தில் இருப்பதும் அவரது அணுகுமுறையுமே இந்திய அணிக்கு பெரிய உத்வேகமாக இருக்கும். அந்த உத்வேகத்தை 2வது டெஸ்ட்டில் இந்திய அணி இழந்தது.

3வது டெஸ்ட் போட்டி வரும் 11ம் தேதி கேப்டவுனில் தொடங்கவுள்ள நிலையில், அந்த டெஸ்ட்டில் விராட் கோலி ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், விராட் கோலியின் ஃபிட்னெஸ் குறித்து தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அப்டேட் செய்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ராகுல் டிராவிட், விராட் கோலி நன்றாக இருக்கிறார். கேப்டவுனில் 2 நெட் செசன்களில் ஆடினால் போட்டிக்கு தயாராகிவிடுவார் என நினைக்கிறேன். நான் அவருடன் பேசியவரை, 3வது டெஸ்ட்டுக்கு இன்னும் 4 நாட்கள் இருப்பதால் அதற்குள்ளாக கண்டிப்பாக தயாராகிவிடுவார் என்று ராகுல் டிராவிட் நற்செய்தியை கூறியுள்ளார்.
 

click me!