ஸ்மித்தை தாறுமாறா புகழ்ந்த மாஸ்டர் பிளாஸ்டர்

By karthikeyan VFirst Published Sep 6, 2019, 5:31 PM IST
Highlights

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் ஸ்மித்தின் அபாரமான பேட்டிங்கை கண்ட சச்சின் டெண்டுல்கர், அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார். 
 

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் ஸ்மித்தின் அபாரமான பேட்டிங்கை கண்ட சச்சின் டெண்டுல்கர், அவரை வெகுவாக புகழ்ந்துள்ளார். 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களாக விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் மற்றும் ஜோ ரூட் ஆகிய நால்வரும் திகழ்கின்றனர். இவர்கள் நால்வரில் விராட் கோலி தான் டாப்பில் இருக்கிறார். நால்வருமே சமகால கிரிக்கெட்டின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்தாலும், நிலையான ஆட்டம் மற்றும் சாதனைகளின் காரணமாக விராட் கோலி தான் நால்வரில் சிறந்த பேட்ஸ்மேனாக முன்னாள் ஜாம்பவான்களால் புகழப்படுகிறார். 

ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி சிறந்த வீரராக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தமட்டில் ஸ்மித் தான் கோலோச்சுகிறார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடையை அனுபவித்த ஸ்மித், தடைக்கு பின் வேற லெவலில் ஆடிவருகிறார். 

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த ஸ்மித், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் அடித்தார். அந்த இன்னிங்ஸில் ஆர்ச்சரின் பவுன்ஸரில் பின் கழுத்தில் அடிபட்டதால், இரண்டாவது இன்னிங்ஸில் ஆடவில்லை. அந்த காயம் காரணமாக மூன்றாவது போட்டியிலும் ஆடவில்லை. 

நான்காவது போட்டியில் மீண்டும் களமிறங்கிய ஸ்மித், தன்னை வீழ்த்தும் ஆயுதமாக இங்கிலாந்து அணி கருதிய ஆர்ச்சரை அலறவிட்டார். அபாரமாக ஆடிய ஸ்மித், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது மூன்றாவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.  ஆஷஸ் வரலாற்றில் டான் பிராட்மேன், ஹாமண்ட் ஆகியோருக்கு அடுத்த வெற்றிகரமான வீரராக ஸ்மித் திகழ்கிறார். 

டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஆஷஸ் தொடரிலும் சாதனைகளை குவித்துவருகிறார். சமகால டெஸ்ட் கிரிக்கெட்டின் தலைசிறந்த டெஸ்ட் வீரராக ஸ்மித் வலம்வருகிறார். 

இந்நிலையில், நடந்துவரும் நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஸ்மித்தின் ஆட்டத்தை கண்ட சச்சின் டெண்டுல்கர், ஸ்மித்தை வெகுவாக பாராட்டியுள்ளார். இதுகுறித்து சச்சின் பதிவிட்டுள்ள டுவீட்டில், சிக்கலான பேட்டிங் டெக்னிக்.. ஒழுங்கான தெளிவான மனநிலை ஆகியவை தான் ஸ்மித்தை வேற லெவலுக்கு கொண்டுசெல்கிறது. செம கம்பேக் என்று சச்சின் புகழ்ந்துள்ளார். 

COMPLICATED TECHNIQUE but an ORGANIZED MINDSET is what sets apart. Incredible comeback! pic.twitter.com/02MNGkYQ7y

— Sachin Tendulkar (@sachin_rt)
click me!