வங்கதேச அணியை சுழலில் சுருட்டிய ரஷீத் கான்.. கத்துக்குட்டியிடம் கதற கதற அடிவாங்கும் வங்கதேசம்

By karthikeyan VFirst Published Sep 6, 2019, 4:39 PM IST
Highlights

வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான சௌமியா சர்க்காரும் சோபிக்கவில்லை. சர்க்கார் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த லிட்டன் தாஸை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்திய ரஷீத் கான், அதன்பின்னர் விக்கெட் வேட்டையை தொடர்ந்தார்.
 

ஆஃப்கானிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. ரஷீத் கான் கேப்டனனான பிறகு ஆஃப்கானிஸ்தான் அணி ஆடும் முதல் போட்டி இது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி, ரஹ்மத் ஷாவின் அபார சதம் மற்றும் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆஃப்கானின் பொறுப்பான 92 ரன்கள் மற்றும் கேப்டன் ரஷீத் கானின் அரைசதத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 342 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் வங்கதேச அணி, பேட்டிங்கில் படுமோசமாக சொதப்பியது. ஃபாஸ்ட் பவுலரே இல்லாமல் களமிறங்கி பவுலிங்கில் சொதப்பியதோடு, பேட்டிங்கில் அதைவிட மோசமாக சொதப்பியது. 

வங்கதேச அணியின் தொடக்க வீரர் ஷத்மான் இஸ்லாம் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான சௌமியா சர்க்காரும் சோபிக்கவில்லை. சர்க்கார் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த லிட்டன் தாஸை தனது முதல் ஓவரிலேயே வீழ்த்தினார் ரஷீத் கான். 

25வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய ரஷீத் கான், அந்த ஓவரில் லிட்டன் தாஸை வீழ்த்தினார். அதன்பின்னர் 33வது ஓவரில் ஷகிப் அல் ஹசன் மற்றும் முஷ்ஃபிகுர் ரஹீம் ஆகிய இரண்டு சீனியர் வீரர்களையும் வீழ்த்தினார் ரஷீத் கான். மற்றொரு அனுபவ வீரரான மஹ்மதுல்லாவையும் 7 ரன்களில் ரஷீத் கான் வெளியேற்றினார். ஷகிப், முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் மஹ்மதுல்லா ஆகிய மூவரையும் சோபிக்கவிடாமல் தடுத்துவிட்டார் ரஷீத் கான். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய மோமினுல் ஹாக் மட்டும் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அரைசதம் அடித்த மாத்திரத்தில் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். வங்கதேச அணி 146 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. மொசாடெக் ஹுசைனும் டைஜுல் இஸ்லாமும் ஆடிவருகின்றனர். ஹுசைன் சிறப்பாக ஆடிவருகிறார். 
 

click me!