இளம் வீரர் அபார சதம்.. வலுவான நிலையில் இந்தியா ரெட் அணி

By karthikeyan VFirst Published Sep 6, 2019, 3:32 PM IST
Highlights

துலீப் டிராபி தொடரின் முதல் 3 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், கடைசி போட்டியில் இந்தியா ரெட் மற்றும் இந்தியா க்ரீன் அணிகள் ஆடிவருகின்றன. 

உள்நாட்டு போட்டியான துலீப் டிராபி நடந்துவருகிறது. இதில் இந்தியா ப்ளூ, இந்தியா ரெட் மற்றும் இந்தியா க்ரீன் ஆகிய மூன்று அணிகள் ஆடிவருகின்றன. 

துலீப் டிராபியின் முதல் 3 போட்டிகள் டிராவில் முடிந்த நிலையில், கடைசி போட்டியில் இந்தியா ரெட் மற்றும் இந்தியா க்ரீன் அணிகள் ஆடிவருகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா க்ரீன் அணி, முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்தியா ரெட் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ப்ரியங்க் பன்சால் 33 ரன்களிலும் கருண் நாயர் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் அங்கிட் கல்சி மற்றும் மஹிபால் லோம்ரார் ஆகிய இருவரும் முறையே 30 மற்றும் 15 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிதானமாக ஆடிய தொடக்க வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் சதம் விளாசினார். 

நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிய அபிமன்யூ ஈஸ்வரன் 153 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டுக்கு பிறகு இஷான் கிஷானுடன் ஆதித்யா சர்வதே ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிவருகின்றனர். மூன்றாம் நாள் டீ பிரேக் வரை இந்தியா ரெட் அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து ஆடிவருகிறது. 
 

click me!