பார்க்கத்தானே போறீங்க ”தாதா”வோட ஆட்டத்த.. கங்குலிக்கு செம பில்டப் கொடுத்த சச்சின் டெண்டுல்கர்

By karthikeyan VFirst Published Oct 18, 2019, 4:14 PM IST
Highlights

பிசிசிஐயின் புதிய தலைவர் பதவிக்கு போட்டியே இல்லாமல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் கங்குலி. அவர் மட்டுமே தலைவர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதால், வரும் 23ம் தேதி போட்டியே இல்லாமல் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார் கங்குலி. 
 

சிறந்த நிர்வாகத்திறமையும் தலைமைத்துவ பண்புகளும் கொண்டவர் கங்குலி என்பது அவர் கேப்டனாக இருந்த காலத்திலேயே அவரது செயல்பாடுகளின் மூலம் அனைவருக்கும் தெரியும். எனவே பிசிசிஐயின் தலைவராக சிறப்பாக செயல்பட்டு, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு திறமைக்கு முன்னுரிமை அளித்து இந்திய கிரிக்கெட்டை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவார் என்பதில் சந்தேகமில்லை. 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு, இளம் வீரர்களை வளர்த்தெடுத்து, சிறப்பான அணியை உருவாக்கி, இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியதோடு, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்திய அணியை தலைநிமிரவைத்தவர். 

அதேபோலவே பிசிசிஐயின் தலைவராகவும் சிறப்பாக செயல்படுவார் என கங்குலியின் தலைமையில் நீண்டகாலம் ஆடிய மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி கிரிக்கெட் ஆடிய விதம், இந்திய கிரிக்கெட்டுக்காகவும் நாட்டுக்காகவும் அவர் செய்த பங்களிப்பு ஆகியவை அபாரமானது. அவர் இந்திய அணிக்காக ஆடியபோது எந்த மாதிரியான திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் செயல்பட்டாரோ, அதேபோலவே பிசிசிஐயின் தலைவராகவும் சிறப்பாக செயல்படுவார் என்பதில் சந்தேகமேயில்லை. எனக்கு கங்குலியை நன்கு தெரியும் என்றவகையில்தான் இதை சொல்கிறேன் என்று சச்சின் தெரிவித்துள்ளார். 
 

click me!