ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னையின் கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் நாளை பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஐபிஎல் 2024 சீசன் அறிவிப்பு வெளியானது முதல் ஒவ்வொரு அணியிலும் பல விதமான மாற்றங்கள் செய்யப்பட்டு வந்தது. ஏற்கனவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டார். இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணிகளைத் தொடர்ந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் கேப்டன் மாற்றப்பட்டுள்ளார். இதுவரையில் 16 சீசன்களாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5 முறை டிராபியை வென்று கொடுத்த தோனி, ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடி அதிக வெற்றி பெற்ற கேப்டன்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். தோனி, 226 போட்டிகளில் விளையாடி 133 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி சதவிகிதம் – 58.85 ஆகும்.
OFFICIAL STATEMENT: MS Dhoni hands over captaincy to Ruturaj Gaikwad.
— Chennai Super Kings (@ChennaiIPL)