IPL 2021 ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்; ஜடேஜா காட்டடி..! ராஜஸ்தான் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே

Published : Oct 02, 2021, 09:45 PM IST
IPL 2021 ருதுராஜ் கெய்க்வாட் அதிரடி சதம்; ஜடேஜா காட்டடி..! ராஜஸ்தான் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த சிஎஸ்கே

சுருக்கம்

ருதுராஜ் கெய்க்வாட்டின் அதிரடி சதத்தால் 20 ஓவரில்   ரன்களை குவித்த சிஎஸ்கே அணி,   ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

ஐபிஎல் 14வது சீசனில் அபுதாபியில் இன்று நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் - டுப்ளெசிஸ் வழக்கம்போலவே அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 47 ரன்களை சேர்த்து கொடுத்தனர். 3ம் வரிசையில் இறங்கிய ரெய்னா 3 ரன்னில் ஆட்டமிழந்தாலும், அதன்பின்னர் களமிறங்கிய மொயின் அலி, ருதுராஜுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக ஆடினார்.

மொயின் அலி 21 ரன்னில் ஆட்டமிழக்க, ராயுடு 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்த ருதுராஜ், அதன்பின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி வேகமாக ஸ்கோரை உயர்த்தினார். 18 ஓவரின் முடிவிலேயே 93 ரன்களை எட்டிவிட்டார் ருதுராஜ். ஆனால் 19 மற்றும் 20வது ஓவர்களில் ஜடேஜா பவுண்டரியும் சிக்ஸருமாக விளாச, 20வது ஓவரின் 5வது பந்தில் தான் ருதுராஜுக்கு ஸ்டிரைக் கொடுத்தார்.

ருதுராஜ் சதமடிக்க 2 பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரின் 5வது பந்தில் ரன்னே அடிக்காத ருதுராஜ், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தால்தான் சதம் என்கிற கட்டாயத்தில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி ஐபிஎல்லில் முதல் சதத்தை பதிவு செய்தார்.

ருதுராஜ் மற்றும் ஜடேஜாவின் அதிரடியால் 20 ஓவரில் 189 ரன்களை குவித்து, 190 ரன்கள் என்ற கடின இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!