டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 17ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு ரன்னில் தோல்வி அடைந்த நிலையில் விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ் கண்ணீர் விட்டு அழுத வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்று டெல்லி கேபிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்து 181 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 58 ரன்கள் எடுத்தார். அலீஸ் கேப்ஸி 48 ரன்கள் சேர்த்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஷ்ரேயங்கா பாட்டீல் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆஷா ஷோபனா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 182 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஷோபி மோலினெக்ஸ் மற்றும் எல்லீஸ் பெர்ரி இருவரும் இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். எனினும், மோலினெக்ஸ் 33 ரன்களில் வெளியேற, எல்லீஸ் பெர்ரி 49 ரன்களில் நடையை கட்டினார்.
அதன் பிறகு ஷோஃபி டிவைன் மற்றும் ரிச்சா கோஷ் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். இதில், ஷோஃபி 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜார்ஜியா வார்ஹாம் களமிறங்கினார். கடைசி ஓவருக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் ரிச்சா கோஷ் 2 சிக்சர், 2 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஒரு பந்துக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு ரன் எடுத்தால் டிரா என்ற நிலையில் ரன் எடுக்க ஓடிய போது ரன் அவுட்டானார். அப்போது அவர், 29 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உள்பட 51 ரன்கள் எடுத்து ரன் அவுட் செய்யப்பட்டார்.
இதனால், மன வேதனை அடைந்த ரிச்சா கோஷ் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரையும் கண்கலங்கச் செய்தது. இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் வீராங்கனையான ஜெமிமா ரோட்ரிக்ஸ் அவருக்கு ஆறுதல் கூறினார். எனினும், ரன் எடுக்க ஓடிய போது விழுந்த நிலையில் அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதிக்க பிசியோ மைதானத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இறுதியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில், 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றதன் மூலமாக விளையடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 2ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியானது குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக முன்னேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Heart Wrenching Moment for RCB and Richa Ghosh pic.twitter.com/TpGwHX6VWv
— ICT Fan (@Delphy06)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷோபி டிவைன், எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), திஷா கசாட், ஜார்ஜியா வார்ஹாம், ஷோபி மோலினெக்ஸ், ஷ்ரேயங்கா பாட்டீல், ஆஷா ஷோபனா, ஷ்ரத்தா போகர்கார், ரேணுகா தாகூர் சிங்.
டெல்லி கேபிடல்ஸ்:
மெக் லேனிங் (கேப்டன்) ஷஃபாலி வர்மா, ஆலீஷ் கேப்ஸி, ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசன்னே கேப், ஜேஸ் ஜோனசென், அருந்ததி ரெட்டி, தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, ராதா யாதவ், டைட்டஸ் சாது.
From scoring a match-winning fifty to getting used to last-ball thrillers in 🥶
Jemimah Rodrigues & Shafali Verma sum up ' roaring entry to the playoffs 🙌 - By | | pic.twitter.com/G3guIqeQ6q