அவங்க 2 பேரும் செம பார்ட்னர்ஸ்ங்க.. இந்திய அணிக்கு அது மிகப்பெரிய இழப்பு.. ரோஸ் டெய்லர் அதிரடி

By karthikeyan VFirst Published Jun 13, 2019, 11:45 AM IST
Highlights

இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதேபோலவே டாப் ஆர்டரும் பவுலர்களும் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி, முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் இன்றைய போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. நியூசிலாந்து அணியும் அது ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர் பேட்டிங்கும், பவுலிங்கும் தான். அதேபோலவே டாப் ஆர்டரும் பவுலர்களும் முதல் 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரில் ஒருவர் கடைசி வரை நின்றாலோ அல்லது சதமடித்தாலோ இந்திய அணியின் வெற்றி நிச்சயமாகிவிடும். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து, கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை தேடிக்கொடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவான் சதமடித்து அசத்தினார். இவ்வாறு இந்திய அணிக்கு எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தவானுக்கு காயம் ஏற்பட்டிருப்பது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐசிசி தொடர்கள் என்றாலே அடித்து நொறுக்குபவர் தவான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸின் பவுன்ஸரில் தவானுக்கு கை கட்டைவிரலில் அடிபட்டது. சிறிய அளவிலான எலும்பு முறிவு என்பதால் அடுத்த சில போட்டிகளில் தவான் ஆடமாட்டார். எனவே அவருக்கு பதிலாக ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக களமிறக்கப்படுவார். 

ரோஹித் - தவான் தொடக்க ஜோடி சர்வதேச அளவில் சிறந்த ஜோடியாக திகழ்கிறது. தொடக்க ஜோடியாக நிறைய சாதனைகளை செய்து வெற்றிகரமாக திகழ்ந்துவருகிறது. ரோஹித் - தவான் இடையேயான புரிதல் அபாரமானது. இருவருக்கும் இடையேயான புரிதல் ஆட்டத்திலும் எதிரொலிக்கும். 

இந்நிலையில், அந்த ஜோடி பிரிந்திருப்பது இந்திய அணிக்கு இழப்புதான். இன்று இந்திய அணியுடன் நியூசிலாந்து மோதவுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர், ஷிகர் தவான் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு. ஐசிசி தொடர்களில் அபாரமாக ஆடுபவர் அவர். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்தில் நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார் தவான். 

ரோஹித்தும் தவானும் சிறந்த தொடக்க வீரர்கள். வலது - இடது கை பேட்டிங் ஜோடி என்பது அவர்களுக்கு பெரிய பலம். இருவருக்கும் இடையே அபாரமான புரிதல் உள்ளது. அந்த வகையில் தவான் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்று டெய்லர் தெரிவித்தார். 
 

click me!