பவுச்சர் சொல்வது தவறு – பொங்கி எழுந்த ரோகித் சர்மா மனைவி ரித்திகா!

Published : Feb 06, 2024, 06:07 PM IST
பவுச்சர் சொல்வது தவறு – பொங்கி எழுந்த ரோகித் சர்மா மனைவி ரித்திகா!

சுருக்கம்

மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கூறுவது தவறான விஷயங்கள் என்று ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா பதிலடி கொடுத்துள்ளார்.

பிசிசியின் மூலமாக ஆண்டுதோறும் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சீசன் நடத்தப்பட்டது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது சாம்பியனானது. கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு 16அவது சீசன் நடந்தது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 5ஆவது முறையாக சாம்பியனானது.

ரோகித் சர்மா சரியாக பேட்டிங் ஆடவில்லை – கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கம், ஏன்? விளக்கம் கொடுத்த பயிற்சியாளர்!

இதையடுத்து 17ஆவது சீசன் வரும் மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது. ஏன், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்பதற்கான காரணத்தை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் வெளியிட்டார்.

வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்த ஆஸ்திரேலியா – 3ஆவது போட்டியில் 6.5 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்து வெற்றி!

கடந்த சில சீசன்களாக ரோகித் சர்மா பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். அவரது பேட்டிங் திறமை அணிக்கு கண்டிப்பான முறையில் தேவை. ஆதலால், தான் அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கினோம். இனி, அவர் அணியில் எந்தவித அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் ஆடலாம் என்று கூறியுள்ளார். 

இந்த நிலையில் தான் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, மும்பை இந்தியன்ஸ் அணி மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். மார்க் பவுச்சர் கூறியதில் பல விஷயங்கள் தவறாக உள்ளது என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி மீது ரோகித் சர்மா மட்டுமின்ற் அவரது குடும்பத்தினர் அதிருப்தியில் இருந்தனர். இந்த நிலையில் தற்போது பவுச்சர் மற்றொரு சர்ச்சை கருத்தை பதிவிட்டிருக்கிறார். ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணியில் பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உலக சிலம்பாட்ட போட்டி – 40 பதக்கங்களுடன் தமிழகம் வந்த வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!