ஓரம் போ ஓரம் போ ரோகித் சர்மா பஸ்ஸு வருது --- MI பஸ் டிரைவரான டான் – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Apr 14, 2024, 12:10 PM IST

மும்பை இந்தியன்ஸ் அணியின் பஸ் டிரைவரான ரோகித் சர்மாவின் வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.


வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 29ஆவது லீக் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில், ரோகித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனி இருவரும் கேப்டன்களாக இல்லாமல் முதல் முறையாக இந்தப் போட்டியில் மோதுகின்றன. இதற்கு முன்னதாக இரு அணிகளும் 36 ஐபிஎல் போட்டிகளில் மோதியுள்ளன.

இதில், மும்பை இந்தியன்ஸ் 20 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த 2 போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் வான்கடே மைதானத்தில் மோதிய 11 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 7 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

Tap to resize

Latest Videos

ஒட்டுமொத்தமாக வான்கடே மைதானத்தில் நடந்த 80 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 50 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 30 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 4 போட்டிகளில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் அடைந்துள்ளது.

இன்று நடக்கும் போட்டிக்காக இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் பஸ் டிரைவராக மாறிய ரோகித் சர்மாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேகமாக பஸ்ஸில் ஏறிய ரோகித் சர்மா நேராக டிரைவர் சீட்டில் அமர்ந்து, ஸ்டியரிங்கை பிடிக்கிறார். அதன் பிறகு மொபைல் போன் வாங்கி செல்ஃபி எடுக்கிறார். இந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

 

Aaj gaadi tera bhai chalayega vibes 😂pic.twitter.com/g7YSF8JuLA

— R A T N I S H (@LoyalSachinFan)

 

click me!