பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 27ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 27ஆவது லீக் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது. முல்லன்பூரில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளார். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக சாம் கரண் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். காயம் காரணமாக இடம் பெறாமலிருந்த லியாம் லிவிங்ஸ்டன் திரும்ப வந்துள்ளார். மேலும், அதர்வா டைடு அணியில் இடம் பெற்றுள்ளார்.
இதே போன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இம்பேக்ட் பிளேயராக இடம் பெற்றுள்ளார். ஜோஸ் பட்லர் இடம் பெறவில்லை. மேலும் ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ்:
சாம் கரண் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், அதர்வா டைடு, பிராப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஹர்ஷல் படேல், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், கஜிஸோ ரபாடா.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரன் ஹெட்மயர், துருவ் ஜூரெல், கேசவ் மகராஜ் டிரெண்ட் போல்ட், ஆவேஷ் கான், குல்தீப் சென், யுஸ்வேந்திர சஹால், ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியன்