என்ன டயட்? சாண்ட்விச், பீசா, ஆலு சாட், பர்ஃபி ஆர்டர் செய்த கோலி – வைரலாகும் வீடியோ!

By Rsiva kumar  |  First Published Apr 13, 2024, 4:04 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி சாண்ட்விச், பீட்சா, ஆலு சாட் ஆர்டர் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விளையாடிய 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளது. மேலும், பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், எஞ்சிய 8 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

கடைசியாக நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி ஹோம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் தான் விராட் கோலியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பாப் டூ ப்ளெசிஸ், முகமது சிராஜ் ஆகியோரும் இடம் பெற்றிருந்தது. அப்போது விராட் கோலி தனது மொபைல் போனில் சாப்பிடுவதற்கு சாண்ட்விச், பீட்சா, ஆலூ சாட், பர்ஃபி என்று வரிசையாக ஆர்டர் செய்கிறார். அப்போது சிராஜ், உங்களது டயட் பற்றி கேள்வி எழுப்புகிறார்? அதற்கு என்ன டயட்? என்னை சாப்பிட விடுங்கள் என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தொடரில் விராட் கோலி 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 319 ரன்கள் எடுத்து ஆரஞ்சு கேப் பெற்றுள்ளார்.

 

Virat Kohli says goodbye to diet. 😂 pic.twitter.com/9SFBy0Aham

— Johns. (@CricCrazyJohns)

 

click me!