ரோஹித் சர்மா தனது ஜெர்சி எண் 45-ன் பின்னணி குறித்து பேசியுள்ளார்.
ரோஹித் சர்மா தனது ஜெர்சி எண் 45-ன் பின்னணி குறித்து பேசியுள்ளார்.
இந்திய அணியின் சீனியர் அதிரடி பேட்ஸ்மேனும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளின் துணை கேப்டனுமான ரோஹித் சர்மா, சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். டெஸ்ட் அணியிலும் கடந்த ஆண்டில் சிறப்பாக ஆடி தனக்கான இடத்தை பிடித்துவிட்டார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 3 இரட்டை சதங்கள், 264 ரன்கள் என்ற அதிகபட்ச ஸ்கோர், டி20 கிரிக்கெட்டில் 4 இரட்டை சதங்கள் என பல அசாத்திய சாதனைகளை தன்னகத்தே கொண்டவர் ரோஹித் சர்மா. சிக்ஸர் அடிப்பதில் வல்லவரான ரோஹித் சர்மா, ஹிட்மேன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.
கிரிக்கெட்டில் சில வீரர்களின் ஜெர்சி எண் காலத்தால் அழியாத அடையாளமாகிவிட்டது. சச்சின் டெண்டுல்கர்(10), தோனி(7), யுவராஜ் சிங்(12), ரிக்கி பாண்டிங்(14) என பல முன்னாள் வீரர்களின் ஜெர்சி நம்பர் வீரர்களின் அடையாளமாகவே மாறிவிட்டது. அந்தவரிசையில் விராட் கோலி(18), ரோஹித் சர்மா(45) ஆகியோரும் அடங்குவர்.
தனது ஜெர்சி எண் தனது அடையாளமாக மாறும் அளவிற்கு கிரிக்கெட்டில் சாதித்தவர்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். பெரும்பாலான வீரர்கள், தங்களுக்கு அதிர்ஷ்டமான எண் என்று தாங்கள் நம்பும் எண்ணையோ அல்லது, தங்கள் பிறந்ததின எண்ணையோ தேர்வு செய்கின்றனர்.
அந்தவகையில், ரோஹித் சர்மாவின் ஜெர்சி எண்ணான 45-ன் பின்னணி என்ன என்று ரசிகர் ஒருவர் சமூக வலைதளத்தில் ரோஹித் சர்மாவிடம் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா, என் அம்மா அந்த எண்ணை தேர்வு செய்ய சொன்னார். எனக்கு அந்த நம்பர் ராசியாக இருக்கும் என்று என் அம்மா சொன்னார். நான் எந்த கேள்வியும் கேட்காமல் மறுக்காமல், அதை செய்தேன் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
Q: What is the story behind your jersey number 45?
-
A: pic.twitter.com/FBDwrDiPfb