பக்காவா திட்டம் போட்டு சிஎஸ்கேவை வீழ்த்திய ரோஹித் சர்மா.. கடைசி பந்து ரகசியத்தை சொன்ன ஹிட்மேன்

By karthikeyan VFirst Published May 14, 2019, 9:47 AM IST
Highlights

கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை அனுபவ பவுலர் மலிங்காவிடம் கொடுத்தார் ரோஹித். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் மலிங்கா. நான்காவது பந்தில் வாட்சன் அவுட்டாக, ஷர்துல் தாகூர் களத்திற்கு வந்தார். 
 

ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியை கடைசி பந்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. 

ஹைதராபாத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி வெறும் 149 ரன்கள் மட்டும்தான் எடுத்தது. ஆனால் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர் என நல்ல பவுலிங் யூனிட்டை பெற்றிருப்பதால், 150 ரன்கள் என்ற இலக்கைக்கூட எட்டவிடாமல் சிஎஸ்கே அணியை தடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ்.

கடைசி ஓவரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை அனுபவ பவுலர் மலிங்காவிடம் கொடுத்தார் ரோஹித். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் மலிங்கா. நான்காவது பந்தில் வாட்சன் அவுட்டாக, ஷர்துல் தாகூர் களத்திற்கு வந்தார். 

ஐந்தாவது பந்தில் ஷர்துல் தாகூர் 2 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் ஓடினால் கூட போட்டி டிரா ஆகிவிடும். இப்படியொரு நெருக்கடியான சூழலில் மலிங்கா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எகிறியது. கடைசி பந்தை ஸ்லோ டெலிவரியாக ஸ்டம்புக்கு நேராக வீசி ஷர்துல் தாகூரை எல்பிடபிள்யூ செய்தார் மலிங்கா. அந்த பந்தில் விக்கெட் எடுப்பது மட்டும்தான் மும்பை அணியின் வெற்றிக்கு ஒரே வழி. அப்படியொரு கட்டாய சூழலில் அபாரமான ஸ்லோ டெலிவரியால் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணியை மலிங்கா வெற்றி பெற செய்தார். 

ஷர்துல் தாகூரை கடைசி பந்தில் அவுட்டாக்கியது எப்படி என்பது குறித்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார். வெற்றிக்கு பின்னர் பேசிய ரோஹித் சர்மா, கடைசி பந்தில் பேட்ஸ்மேனை வீழ்த்துவதுதான் திட்டம். ஷர்துல் தாகூரை பற்றி எனக்கு நன்கு தெரியும். அவர் பெரிய ஷாட் அடிக்கத்தான் பார்ப்பார் என்பதால், அவருக்கு பந்தை வேகமாக வீசினால் தூக்கி அடித்து விடுவார். அதனால் மலிங்காவுடன் ஆலோசித்து ஸ்லோ டெலிவரியாக வீச முடிவெடுத்தோம். அதன்படி ஸ்லோ டெலிவரி போட்டு விக்கெட்டை வீழ்த்தினோம் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார். 

click me!