ஆறாவது ஓவருலயே டிரேட்மார்க் ஷாட்டில் சிக்ஸர்.. பாகிஸ்தான் பவுலிங்கை பொளந்துகட்டும் ரோஹித்.. ஆக்ரோஷமா ஆடி அரைசதம் அடித்த ஹிட்மேன்

Published : Jun 16, 2019, 04:08 PM IST
ஆறாவது ஓவருலயே டிரேட்மார்க் ஷாட்டில் சிக்ஸர்.. பாகிஸ்தான் பவுலிங்கை பொளந்துகட்டும் ரோஹித்.. ஆக்ரோஷமா ஆடி அரைசதம் அடித்த ஹிட்மேன்

சுருக்கம்

ஹசன் அலி வீசிய ஆறாவது ஓவரிலேயே தனது டிரேட்மார்க் புல் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசிய ரோஹித், தொடர்ந்து அதிரடியாகவே ஆடிவருகிறார். 

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி அரைசதம் அடித்துள்ளார். 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. மான்செஸ்டாரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் ராகுலும் களமிறங்கினர். ராகுல் நிதானமாக தொடங்க, ரோஹித் சர்மாவோ தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடினார். வழக்கமாக தவான் அதிரடியாக ஆட, ரோஹித் களத்தில் நிலைக்க நேரம் எடுப்பார். ஆனால் தவான் இல்லாததால், அவரது பணியை கையில் எடுத்த ரோஹித், தொடக்கம் முதலே அடித்து ஆட, ராகுல் நிதானமாக ஆடிவருகிறார். 

ஹசன் அலி வீசிய ஆறாவது ஓவரிலேயே தனது டிரேட்மார்க் புல் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசிய ரோஹித், தொடர்ந்து அதிரடியாகவே ஆடிவருகிறார். 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை நெருங்கிவிட்டனர். இந்திய அணிக்கு அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடியாக ஆடிவருகிறார். 
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA: மீண்டும் ஓபனராக களம் இறக்கப்படும் சஞ்சு சாம்சன்..? தொடரைக் கைப்பற்றும் இந்தியா..?
சேப்பாக்கம் டூ சின்னசாமி.. தென்னிந்தியாவை மறந்ததா பிசிசிஐ?.. ரசிகர்கள் எழுப்பும் முழக்கம்!