இலங்கை வீரர்களின் சாதனைகளை அந்த அணிக்கு எதிராகவே அடிச்சு காலி செய்த ரோஹித் - ராகுல்

By karthikeyan VFirst Published Jul 7, 2019, 1:05 PM IST
Highlights

உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித்தும் சரி, ரோஹித் - ராகுல் தொடக்க ஜோடியும் சரி, இலங்கைக்கு எதிராக சாதனைகளை குவித்துள்ளனர். 
 

உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித்தும் சரி, ரோஹித் - ராகுல் தொடக்க ஜோடியும் சரி, இலங்கைக்கு எதிராக சாதனைகளை குவித்துள்ளனர். 

உலக கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக ஆடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது. இந்திய அணி டாப் ஆர்டர் பேட்டிங்கையே அதிகமாக சார்ந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில், தங்களது பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து டாப் ஆர்டர்கள் சிறப்பாக ஆடிவருகின்றனர். 

தவான் காயத்தால் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆனால் லீக் சுற்றின் கடைசி இரண்டு போட்டிகளான வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக அபாரமாக ஆடினார் ராகுல். 

இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகிய இருவருமே சதமடித்து அசத்தினர். ரோஹித் இந்த உலக கோப்பையில் தனது 5வது சதத்தை பூர்த்தி செய்து உலக சாதனை படைத்தார். அதேபோல இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் குவித்ததும் உலக கோப்பையில் சாதனையாக அமைந்துள்ளது. 

ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராக சங்கக்கரா(4 சதங்கள்) திகழ்ந்தார். இந்த உலக கோப்பையில் ஏற்கனவே 4 சதங்கள் அடித்திருந்த ரோஹித், இலங்கைக்கு எதிராக 5வது சதம் அடித்து சங்கக்கராவின் சாதனையை முறியடித்தார். இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கராவின் சாதனையை இலங்கை அணிக்கு எதிராகவே முறியடித்தார். 

அதேபோல உலக கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் தொடக்க வீரர்கள் இருவரும் சதமடித்ததில் இலங்கை அணியின் உபுல் தரங்கா - தில்ஷான் ஜோடி தான் டாப். இவர்கள் இருவரும் இரண்டு முறை ஒரே போட்டியில் சதமடித்துள்ளனர். இவர்களை தவிர வேறு எந்த தொடக்க ஜோடியும் உலக கோப்பையில் ஒரே போட்டியில் இருவரும் சதமடித்ததில்லை. இலங்கைக்கு எதிராக ரோஹித்தும் ராகுலும் சதமடித்து இந்த பட்டியலில் இணைந்துள்ளனர். 
 

click me!