IPL 2022 டெல்லி கேபிடள்ஸ் அணி அந்த சீனியர் வீரரை கண்டிப்பாக தக்கவைத்திருக்க வேண்டும்..! உத்தப்பா கருத்து

Published : Dec 02, 2021, 10:16 PM IST
IPL 2022 டெல்லி கேபிடள்ஸ் அணி அந்த சீனியர் வீரரை கண்டிப்பாக தக்கவைத்திருக்க வேண்டும்..! உத்தப்பா கருத்து

சுருக்கம்

டெல்லி கேபிடள்ஸ் அணி ஐபிஎல் 15வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன்பாக சீனியர் வீரர் ஒருவரை கண்டிப்பாக தக்கவைத்திருக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா கருத்து கூறியுள்ளார்.  

ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகளும் புதிதாக இணைவதால், அடுத்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு அணியும் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், நவம்பர் 30ம் தேதி அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது.

டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, அக்ஸர் படேல் மற்றும் அன்ரிக் நோர்க்யா ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்தது.

ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரவிச்சந்திரன் அஷ்வின், அஜிங்க்யா ரஹானே ஆகிய வீரர்களை விடுவித்தது. இந்நிலையில், டெல்லி கேபிடள்ஸ் அணி குறித்து பேசிய ராபின் உத்தப்பா, ஷிகர் தவான் - பிரித்வி ஷா தொடக்க ஜோடி அபாரமாக ஆடியிருக்கிறது. எனவே ஷிகர் தவானை டெல்லி கேபிடள்ஸ் அணி கண்டிப்பாக தக்கவைத்திருக்க வேண்டும்.

அதேபோல ககிசோ ரபாடா - அன்ரிக் நோர்க்யா ஃபாஸ்ட் பவுலிங் ஜோடி மிரட்டலாக பந்துவீசியிருக்கிறது. எனவே ரபாடாவையும் தக்கவைத்திருக்கலாம் என்று உத்தப்பா கருத்து கூறியிருக்கிறார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!