Rishabh Pant: ஐபிஎல்லுக்கு ரெடியான ரிஷப் பண்ட் – என்சிஏவில் அனுமதிக்காக வெயிட்டிங்!

By Rsiva kumar  |  First Published Mar 2, 2024, 3:10 PM IST

ஐபிஎல் தொடருக்கு தயாரான ரிஷப் பண்ட் வரும் 5 ஆம் தேதி தேசிய கிரிக்கெட் அகாடமியிடம் அனுமதி பெற உள்ளார்.


இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், டெல்லி கேபிடல்ஸ் கேப்டனுமான ரிஷப் பண்ட கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்து வந்தார். அதன் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியை மேற்கொண்டார்.

கடந்த ஆண்டு துபாயில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டார். அங்கு சிஎஸ்கே கேப்டன் தோனியிடன் இணைந்து டென்னிஸ் விளையாடினார். தொடர்ந்து அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெறுவார் என்றும், இம்பேக்ட் பிளேயராக இடம் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.

Tap to resize

Latest Videos

எனினும், ஐபிஎல் தொடரில் 17ஆவது சீசனில் ரிஷப் பண்ட் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் மார்ச் 5ஆம் தேதி அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அனுமதி பெற இருக்கிறார். தான் முழு தகுதியுடன் இருப்பதற்கான கிளீரன்ஸ் சான்றிதழ் பெற்ற பிறகு ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொள்வார் என்று தெரிகிறது.

எனினும், இன்னும் அவர் முழுமையான 20 ஓவர்கள் கொண்ட போட்டியில் இடம் பெறாத நிலையில், ஓரிரு போட்டிகளுக்கு பிறகு தான் ரிஷப் பண்ட் கேப்டனாக இருப்பாரா அல்லது இம்பேக்ட் பிளேயராக செயல்படுவாரா என்பது குறித்து தெரியவரும். ரிஷப் பண்ட் கேப்டன் இல்லை என்றால் டெல்லிக்கு டேவிட் வார்னர் தான் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

click me!