IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்

By karthikeyan V  |  First Published May 11, 2023, 7:55 PM IST

இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபினிஷராக உருவெடுத்துள்ள ரிங்கு சிங், உலகின் மிகச்சிறந்த ஃபினிஷரான தோனி தனக்கு கூறிய அறிவுரை குறித்து மனம் திறந்துள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் டாப் 2 இடங்களில் வலுவாக இருப்பதால் அவை இரண்டும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு டெல்லி கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சீசனில் சில இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா ஆகிய வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடிவருகின்றனர். இவர்களில் அபிஷேக்கை தவிர மற்ற மூவரும் இந்திய அணியில் ஆடுமளவிற்கு வளர்ந்துவிட்டனர். இவர்கள் மூவரும் விரைவில் இந்திய அணியில் ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

Tap to resize

Latest Videos

IPL 2023: விராட் கோலியா ரோஹித் சர்மாவா..? தீபக் சாஹரி நச் பதில்

குறிப்பாக ரிங்கு சிங் கேகேஆர் அணிக்காக டெத் ஓவர்களில் கடைசி சில பந்துகளில் பெரிய ஷாட்டுகளை ஆடி அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்திருக்கிறார். குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவைப்பட, கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத அந்த இலக்கை கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி ஆட்டத்தை முடித்து கொடுத்து அசத்திய ரிங்கு சிங், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து கொடுத்தார் ரிங்கு சிங்.

கேகேஆருக்காக டெத் ஓவர்களில் அபாரமாக ஆடி போட்டிகளை வெற்றிகரமாக முடித்து கொடுத்து இந்திய கிரிக்கெட்டின் புதிய ஃபினிஷராக உருவெடுத்துவரும் ரிங்கு சிங், தனக்கு உலகின் தலைசிறந்த ஃபினிஷரான தோனி கூறிய அறிவுரை என்னவென்று பகிர்ந்துள்ளார்.

IPL 2023: ராயுடுவா துபேவா..? அய்யோ பாவம் தல தோனியே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு.. தோனியை ட்ரோல் செய்த சிஎஸ்கே

இதுகுறித்து  பேசிய ரிங்கு சிங், தோனி தான் உலகின் சிறந்த ஃபினிஷர். நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டேன். பந்தை பார்த்து அதற்கேற்ப ஆடு என்றார் தோனி. அதுதான் அவரது அறிவுரை. நான் எளிய ஷாட்டுகளை ஆடத்தான் விரும்புகிறேன். அசாத்தியமான, வித்தியாசமான ஷாட்டுகள் ஆட விரும்பவில்லை. பந்துக்கு ஏற்ப ஆடுவதுதான் எனது ஆட்டம் என்றார் என்றார் ரிங்கு சிங்.
 

click me!