வாசிம் அக்ரம், அக்தரைக்கூட சமாளிச்சுட்டேன்.. அந்த இந்திய பவுலரை சமாளிக்க முடியல..! ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Jun 14, 2020, 8:09 PM IST
Highlights

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தனது கெரியரில் தான் எதிர்கொண்டதிலேயே ரொம்ப கடினமான பவுலர் யார் என்று தெரிவித்துள்ளார். 
 

ஆஸ்திரேலிய அணிக்கு 2003 மற்றும் 2007 ஆகிய இரண்டு உலக கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் ரிக்கி பாண்டிங். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, அசைக்க முடியாத மாபெரும் சக்தியாக திகழ்ந்தது. 2000 - 2010 காலக்கட்டத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது ஆஸ்திரேலிய அணி தான்.

ஆஸ்திரேலிய அணியை அசைக்க முடியாத சக்தியாக வைத்திருந்த ரிக்கி பாண்டிங், தலைசிறந்த கேப்டன் மட்டுமல்லாது, மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் கூட. ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் பாண்டிங்கும் ஒருவர். ஆஸ்திரேலிய அணிக்காக 168 டெஸ்ட் போட்டிகளிலும் 375 ஒருநாள் போட்டிகளிலும் ஆடியுள்ள ரிக்கி பாண்டிங், சர்வதேச கிரிக்கெட்டில் 27,483 ரன்களை குவித்து, அதிகமான ரன்களை குவித்த மூன்றாவது வீரராக திகழ்கிறார்.

பாண்டிங், தனது கெரியரில் வாசிம் அக்ரம், குர்ட்லி ஆம்ப்ரூஸ், ஷோயப் அக்தர், முத்தையா முரளிதரன், சமிந்தா வாஸ், ஷேன் பாண்ட், ஜாகீர் கான், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், ஆலன் டொனால்ட், ஷான் போலாக் உள்ளிட்ட பல சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர்.

ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பாண்டிங், அவரது கெரியரில் அவர் எதிர்கொண்டதில் சிறந்த பவுலர்கள் யார் என்ற ரசிகர் ஒருவரின் சமூக வலைதள கேள்விக்கு பதிலளித்தார். 

அப்போது, வாசிம் அக்ரம், குர்ட்லி ஆம்ப்ரூஸ் ஆகிய இருவரும் மிகச்சிறந்த ஃபாஸ்ட் பவுலர்கள். ஷோயப் அக்தரின் பவுலிங் அதிவேகமாக இருக்கும். அக்தரின் பவுலிங் தான் நான் எதிர்கொண்டதிலேயே அதிவேகமான பவுலிங். ஆனால் ஹர்பஜன் சிங் தான் என்னை அதிகமுறை அவுட்டாக்கியவர் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்திய காலக்கட்டத்தில் அந்த அணிக்கு குறைந்தபட்ச சவாலளித்த ஒரே அணி இந்தியா தான். அதிலும் ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவருக்குமே சிம்மசொப்பனமாக திகழ்ந்த பவுலர் ஹர்பஜன் சிங் தான். 2001 பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். அந்த குறிப்பிட்ட டெஸ்ட் தொடரில் மட்டுமே பலமுறை ரிக்கி பாண்டிங்கை டக் அவுட்டாக்கி அனுப்பினார் ஹர்பஜன் சிங். அதன்பின்னர், அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஹர்பஜன் சிங்கின் சுழற்பந்துவீச்சு கடும் சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!