ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முடிவை இப்பவே சொல்லும் ரிக்கி பாண்டிங்

By karthikeyan VFirst Published Dec 7, 2021, 9:46 PM IST
Highlights

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் முடிவை இப்போதே கணித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.
 

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஆஷஸ் தொடர், உலக கோப்பையை போன்றது. அதனால் ஆஷஸ் தொடரில் இரு அணிகளுமே வெறித்தனமாக விளையாடும். அதுமட்டுமல்லாது, இது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால், இந்த தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமானது. 

2019ம் ஆண்டு ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்த நிலையில், இந்த ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர் 8) பிரிஸ்பேனில் தொடங்கவுள்ளது.

ஆஸ்திரேலிய அணி:

டிம் பெய்ன் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், கேமரூன் க்ரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், நேதன் லயன், மைக்கேல் நெசெர், ஜெய் ரிச்சர்ட்ஸன், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்.

இங்கிலாந்து அணி:

ஜோ ரூட்(கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, டோமினிக் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் க்ராவ்லி, ஹசீப் ஹமீத், டேனியல் லாரன்ஸ், ஜாக் லீச், டேவிட் மலான், க்ரைக் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட், பென் ஸ்டோக்ஸ்.

நாளை ஆஷஸ் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடரில் எந்த அணி ஜெயிக்கும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து அணி 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த கஷ்டப்படுகிறது. எனவே இந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும் என நினைக்கிறேன். கடந்த ஆஷஸில் ஆஸ்திரேலிய அணிக்கு சில அச்சுறுத்தல்கள் இருந்தன. ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை எளிதாக எடுத்தால் தொடர் சவாலாக இருக்கும். அப்படி எளிதாக எடுக்கவில்லை எனில் ஆஸ்திரேலியா தான் ஜெயிக்கும். ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை 3-1 என வெல்லும் என ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார்.
 

click me!