2008 ஐபிஎல்லில் பவுன்ஸரில் பையன் பட்டைய கிளப்புனான்..! இந்திய பவுலரை அப்பவே அடையாளம் கண்ட பாண்டிங்

Published : Apr 19, 2022, 02:57 PM IST
2008 ஐபிஎல்லில் பவுன்ஸரில் பையன் பட்டைய கிளப்புனான்..! இந்திய பவுலரை அப்பவே அடையாளம் கண்ட பாண்டிங்

சுருக்கம்

2008 ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் ஆடியபோது, வலைப்பயிற்சியில் பந்துவீசிய இந்திய பவுலரை கண்டு, தான் வியந்ததாக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.  

2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல்லில், 14 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, 15வது சீசன் நடத்தப்பட்டுவருகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்டபோது, அது இவ்வளவு பெரிய உச்சத்தை தொடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். யாருமே எதிர்பார்த்திராத உயரத்தை ஐபிஎல் எட்டியுள்ளது.

உலகின் பணக்கார ஃப்ரான்சைஸ் விளையாட்டு தொடராக ஐபிஎல் திகழ்கிறது. 2008ம் ஆண்டு ஐபிஎல் முதல் ஆட்டத்தில் கேகேஆரும் ஆர்சிபியும் மோதின. அந்த போட்டியில் பிரண்டன் மெக்கல்லத்தின் அபாரமான சதத்தால் (158) கேகேஆர் அணி தான் அந்த போட்டியில் வெற்றி பெற்றது. ஐபிஎல்லின் முதல் போட்டியையே வியக்கத்தகு போட்டியாக மாற்றிக்காட்டியவர் மெக்கல்லம். அந்த போட்டியில் மெக்கல்லமுடன் ரிக்கி பாண்டிங்கும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடியிருந்தார்.

இப்போது மெக்கல்லம் கேகேஆர் அணியின் பயிற்சியாளராகவும், ரிக்கி பாண்டிங் டெல்லிகேபிடள்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளனர். இவர்களது பயிற்சியில் அந்த அணிகள் நன்றாக ஆடிவருகின்றன.

2008ம் ஆண்டு எல்லாம் ரிக்கி பாண்டிங்கும் அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் உச்சபட்ச ஃபார்மில் வெற்றிகளை குவித்துக்கொண்டிருந்த காலக்கட்டம் ஆகும். அப்போது கங்குலி தலைமையிலான கேகேஆர் அணியில் பாண்டிங், அக்தர் எல்லாம் ஆடியது பெரும் பரபரப்பாகவும் புதிதாகவும் இருந்தது.

லெஜண்ட் பேட்ஸ்மேன், கேப்டனான பாண்டிங், 2008 ஐபிஎல்லில் கேகேஆர் அணியில் வலையில் பேட்டிங் ஆடியபோது இந்திய பவுலிங் திறமை ஒருவரை அடையாளம் கண்டுள்ளார். அவருக்கான வாய்ப்புக்காக பேசியும் இருக்கிறார். அந்த தகவலை இப்போது கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், 2008 ஐபிஎல்லில் கேகேஆர் அணிக்காக நான் ஆடியபோது அசோக் டிண்டா நெட் பவுலராக இருந்தார். 7-10 நாட்கள் தொடர்ச்சியாக வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு சளைப்பே இல்லாமல் பவுன்ஸர்களை வீசினார். அவரது பவுலிங்கையும் கடும் உழைப்பையும் கண்ட நான், பயிற்சியாளர் ஜான் புக்கனானிடம், அசோக் டிண்டாவை ஒப்பந்தம் செய்து ஆடவைக்குமாறு கூறினேன். ஒருவழியாக அவருக்கும் ஐபிஎல்லில் ஆட வாய்ப்பு கிடைத்து அதன்பின்னர் 12-13 ஆண்டுகள் ஆடினார் என்று பாண்டிங் தெரிவித்தார்.

2008லிருந்து 2010 வரை கேகேஆர் அணியில் இடம்பெற்றிருந்த அசோக் டிண்டா, 2011 ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும், 2012-2013 ஆண்டுகளில் புனே வாரியர்ஸ் இந்தியா அணியிலும், 2014-2015ம் ஆண்டுகளில் ஆர்சிபி அணியிலும், 2016-2017ம் ஆண்டுகளில் ரைசைங் புனே சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியிலும் ஆடினார். ஐபிஎல்லில் 78 போட்டிகளில் ஆடி 69 விக்கெட்டுகளை அசோக் டிண்டா வீழ்த்தியுள்ளார்.

இந்தியாவிற்காக 13 ஒருநாள் மற்றும் 9 டி20 போட்டிகளிலும் அசோக் டிண்டா ஆடியுள்ளார்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி பந்து வீச தடை.. பாதியில் பந்தை புடுங்கிய நடுவர்.. என்ன நடந்தது?
நான் ஒன்றும் அவுட் ஆஃப் பார்ம் இல்லை.. ஜஸ்ட் ரன் அவுட் தான்.. மனம் தளராத சூர்யகுமார் யாதவ்