LSG vs RCB: இன்றைய போட்டிக்கான லக்னோ - ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

Published : Apr 19, 2022, 02:30 PM IST
LSG vs RCB: இன்றைய போட்டிக்கான லக்னோ - ஆர்சிபி அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

சுருக்கம்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின்  உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.  

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் ஆர்சிபியும் மோதுகின்றன. இரு அணிகளுமே இதற்கு முன் ஆடிய 6 போட்டிகளில் தலா 4 வெற்றிகளை பெற்றுள்ளன. எனவே 5வது வெற்றியை பெறும் முனைப்பில் இன்று மோதுகின்றன.

மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 2 அணிகளுமே நல்ல பேலன்ஸாக அணிகளாக இருப்பதுடன் பாசிட்டிவான முடிவுகளையும் போட்டிகளில் பெற்றுவருவதால் அந்த அணிகளில் மாற்றங்கள் எதுவும் செய்வதற்கான அவசியமில்லை. எனவே இரு அணிகளுமே கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் களமிறங்கும்.

உத்தேச ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினெஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA: அபிஷேக் சர்மா அதிரடியால் ஈசியாக சேஸ் செய்த இந்திய அணி! தொடரில் 2-1 என முன்னிலை!
Tilak Varma: சேஸிங்கில் 'கிங்' கோலிக்கே சவால் விடும் திலக் வர்மா..! மெகா ரிக்கார்ட்..!