ஸ்லெட்ஜிங் செய்த வீரரை மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வைத்த மகான் சச்சின் டெண்டுல்கர்..! பிறந்தநாள் ஸ்பெஷல்

Published : Apr 24, 2022, 03:45 PM IST
ஸ்லெட்ஜிங் செய்த வீரரை மனம் வருந்தி மன்னிப்பு கேட்க வைத்த மகான் சச்சின் டெண்டுல்கர்..! பிறந்தநாள் ஸ்பெஷல்

சுருக்கம்

சச்சின் டெண்டுல்கரின் 49வது பிறந்ததினமான இன்று, சச்சின் டெண்டுல்கர் பற்றிய சுவாரஸ்யமான சம்பவத்தை பற்றி பார்ப்போம்.  

சர்வதேச கிரிக்கெட்டில் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதன்மையானவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி, 100 சதங்களுடன் 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்த மாபெரும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். 

சச்சின் டெண்டுல்கரின் திறமையை விட, அவரிடம் அனைவரும் வியக்கும் விஷயம் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சினின் பண்புகள் தான். சச்சின் மிகவும் நேர்மையானவர், ஒழுக்கமானவர். களத்தில் அவுட்டே இல்லாததற்கு அம்பயர் அவுட் கொடுத்தால், மறுபேச்சின்றி அதிருப்தியை தனது ரியாக்‌ஷனில் மட்டும் வெளிக்காட்டிவிட்டு, அம்பயரிடம் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியேறும் சச்சின், அவர் அவுட் என்பது அவருக்கு தெரிந்தால் அம்பயர் அவுட் கொடுக்கும் வரை காத்திருக்க மாட்டார்; அவராகவே வெளியேறிவிடுவார். அம்பயர் அவுட் கொடுக்காவிட்டாலும் கூட, அது அவுட் என்று அவருக்கு தெரிந்தால் நடையை கட்டிவிடும் நேர்மையானவர். அம்பயர்களின் முடிவுகள் சரியோ தவறோ, அதை மதிக்கும் பண்பாளர்.

அதேபோலவே எதிரணி வீரர்களை ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டார். தன்னை ஸ்லெட்ஜிங் செய்வோருக்கு வாயில் பதிலடி கொடுக்காமல் பேட்டில் பதிலடி கொடுக்கும் இயல்புடையவர் சச்சின்.  பேட்டிங்கில் மட்டுமல்லாது பண்பிலும் சிறந்த சச்சின் டெண்டுல்கரின் 49வது பிறந்ததினமான இன்று, தன்னை ஸ்லெட்ஜிங் செய்த வீரரை சச்சின் மன்னிப்பு கேட்கவைத்த சம்பவம் குறித்து பார்ப்போம். 

பாகிஸ்தான் முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் தான் அந்த வீரர். சச்சின் டெண்டுல்கரை அவர் ஸ்லெட்ஜிங் செய்ததையும், அதற்கு சச்சின் ரியாக்ட் செய்த விதத்தையும் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியுள்ள சக்லைன், அத்துடன் ஸ்லெட்ஜிங் செய்வதையே விட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

சச்சினை ஸ்லெட்ஜிங் செய்த சம்பவம் குறித்து பேசியிருந்த சக்லைன் முஷ்டாக், 1997ல் கனடாவில் நடந்த சஹாரா கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சச்சின் பேட்டிங் ஆடியபோது, அவரை ஸ்லெட்ஜிங் செய்தேன். அவரிடம் என்ன சொன்னேன் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் அவர் எனக்கு அளித்த பதிலடி, என் நெஞ்சை தைத்ததால் இன்றும் அது நினைவிருக்கிறது. 

நான் அவரை ஏதோ சொல்லி ஸ்லெட்ஜ் செய்ய, என்னிடம் வந்த சச்சின், நான் உங்களிடம் தகாத முறையில் நடந்ததேயில்லையே... பின் நீங்கள் ஏன் என்னிடம் தவறாக நடக்கிறீர்கள் என்று கேட்டார். சச்சின் அப்படி கேட்டதும், எனக்கு மிகவும் தர்மசங்கடமாகிவிட்டது. எனக்கே என்னை நினைத்து வெட்கமானது. அவர் அப்படி கேட்டதும், அவரிடம் என்ன சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை. மேலும், உங்களை(சாக்லைன் முஷ்டாக்) ஒரு வீரராகவும் மனிதராகவும் உங்கள் மீது உயரிய மதிப்பீடு வைத்திருக்கிறேன் என்றார் சச்சின். இதையடுத்து அந்த போட்டி முடிந்ததும் அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அதன்பின்னர் அவர் எனது பந்தை பலமுறை பொளந்து கட்டியிருக்கிறார். ஆனால் நான் அவரை ஸ்லெட்ஜிங் செய்ததேயில்லை என்று சக்லைன் முஷ்டாக் கூறியிருந்தார்.

தன்னை ஸ்லெட்ஜிங் செய்தவரையே தனது அணுகுமுறையால் மன்னிப்பு கேட்கவைத்த மகான் சச்சின் டெண்டுல்கர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

T20 World Cup 2026: ஓமனை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா!
தோனி ஒரு சிறந்த வழிகாட்டி! எனது கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றிய அந்த ஒரு தருணம் - Shviam Dube பேச்சு!