LSG vs MI: மும்பை அணியில் மீண்டும் இவருக்கே வாய்ப்பா? இல்ல அவருக்கா? இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 24, 2022, 3:14 PM IST
Highlights

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 2 புதிய அணிகளும் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் சிறப்பாக ஆடுகின்றன.

ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து படுமோசமான நிலையில் உள்ளது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ்.

மும்பை வான்கடேவில் இன்று நடக்கும் போட்டியில் லக்னோவிற்கு எதிராக இந்த சீசனில் முதல் வெற்றியை எதிர்நோக்கி களமிறங்குகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்படலாம். கடந்த போட்டியில் ஆடிய ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டர் ரித்திக் ஷோகீனுக்கு பதிலாக அதற்கு முந்தைய போட்டிகளில் ஆடிய ரிஸ்ட் ஸ்பின்னர் முருகன் அஷ்வின் ஆடலாம். ஆனால் ரித்திக் ஷோகீன் பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்வார் என்பதால் அவரே இந்த போட்டியில் ஆடுவதற்கான வாய்ப்புள்ளது.

உத்தேச மும்பை இந்தியன்ஸ் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா,பொல்லார்டு, டேனியல் சாம்ஸ், ரித்திக் ஷோகீன்/முருகன் அஷ்வின், ரிலே மெரிடித், ஜெய்தேவ் உனாத்கத், ஜஸ்ர்ப்ரித் பும்ரா.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. கடந்த போட்டிகளில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் அந்த அணி களமிறங்கும்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மனீஷ் பாண்டே, மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், துஷ்மந்தா சமீரா, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய்.
 

click me!