#PBKSvsRCB வாஷிங்டன் சுந்தரை ஓரங்கட்டிய கோலி.. பஞ்சாப் கிங்ஸ் அணியில் தாறுமாறு மாற்றங்கள்..!

By karthikeyan VFirst Published Apr 30, 2021, 7:22 PM IST
Highlights

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
 

ஐபிஎல் 14வது சீசனின் இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. அகமதாபாத்தில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

ஆர்சிபி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, ஷபாஸ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆர்சிபி அணி:

கோலி(கேப்டன்), படிக்கல், ரஜாத் பட்டிதர், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், ஷபாஸ் அகமது, டேனியல் சாம்ஸ், கைல் ஜாமிசன், ஹர்ஷல் படேல், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.

முதல் 6 போட்டிகளில் வெறும் இரண்டே வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, வெற்றி முனைப்புடன் களமிறங்குவதால், வெற்றியை எதிர்நோக்கி, அணியில் 3 மாற்றங்களை செய்துள்ளது. தொடக்க வீரர் மயன்க் அகர்வால் நீக்கப்பட்டு பிரப்சிம்ரன் சிங்கும், வெளிநாட்டு வீரர் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸுக்கு பதிலாக ஃபாஸ்ட் பவுலர் ரிலே மெரிடித்தும், அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஹர்ப்ரீத் ப்ராரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

கேஎல் ராகுல்(கேப்டன், விக்கெட் கீப்பர்), கிறிஸ் கெய்ல், நிகோலஸ் பூரன், பிரப்சிம்ரன் சிங், தீபக் ஹூடா, ஷாருக்கான், கிறிஸ் ஜோர்டான், ஹர்ப்ரீத் ப்ரார், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, ரிலே மெரிடித்.
 

click me!