நானே எத்தனையோ முறை முயற்சி பண்ணியிருக்கேன்; முடியல..! பிரித்வியின் பேட்டிங்கிற்கு தலைவணங்கிய சேவாக்

By karthikeyan VFirst Published Apr 30, 2021, 5:47 PM IST
Highlights

தனது கெரியரில்  தானே எத்தனையோ முறை முயற்சி செய்தும் ஒரு ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி அடிக்க முடியவில்லை என்பதை நேர்மையுடன் ஒப்புக்கொண்ட சேவாக், அந்த சாதனையை படைத்த பிரித்வி ஷாவிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
 

கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி, தொடக்க வீரர் பிரித்வி ஷாவின் அதிரடியான பேட்டிங்கால் 17வது ஓவரிலேயே இலக்கை எட்டி டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், டெல்லி கேபிடள்ஸ் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா 6 பவுண்டரிகளை விளாசினார். ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரின் 6 பந்துகளையும் பவுண்டரி அடித்து சாதனை படைத்தார். ஐபிஎல்லில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசியதில் ரஹானேவிற்கு அடுத்த 2வது வீரர் என்ற சாதனையை படைத்தார் பிரித்வி ஷா. 

18 பந்தில் அரைசதம் அடித்த பிரித்வி ஷா, 41 பந்தில் 82 ரன்களை குவித்து டெல்லி அணியை வெற்றி பெற செய்தார். பிரித்வி ஷாவின் பேட்டிங்கை முன்னாள் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக் வெகுவாக புகழ்ந்துள்ளார்.

பிரித்வி ஷா குறித்து பேசிய சேவாக், ஒரு ஓவரின் 6 பந்திலும் பவுண்டரிகள் அடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அனைத்து பந்தையுமே சரியான கேப்பில் அடித்தாக வேண்டும். எனது கெரியரில் நானும் ஓபனிங்கில் தான் இறங்கியிருக்கிறேன். எத்தனையோ முறை ஒரு ஓவரின் அனைத்து பந்துகளையும் பவுண்டரி அடிக்க முயன்றிருக்கிறேன். ஆனால் என்னால் 18-20 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்திருக்கிறது. என்னால் ஒருமுறை கூட, ஒரு ஓவரில் 6 பவுண்டரிகளோ அல்லது 6 சிக்ஸர்களோ அடிக்க முடிந்ததில்லை. அதற்கு மிகச்சிறந்த டைமிங்கில் பந்தை கேப்பில் அடிக்க வேண்டும். பிரித்வி ஷாவின் மிகச்சிறந்த இன்னிங்ஸிற்கு தலைவணங்குகிறேன் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.
 

click me!