இந்தியாவில் கோர தாண்டவம் ஆடும் கொரோனா..! ஐபிஎல் சம்பளத்தில் 10 சதவிகிதத்தை நிதியுதவி வழங்கிய உனாத்கத்

By karthikeyan VFirst Published Apr 30, 2021, 6:17 PM IST
Highlights

கொரோனாவின் 2ம் அலையை இந்தியா எதிர்கொண்டுவரும் நிலையில், மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில், தனது ஐபிஎல் ஊதியத்தில் 10 சதவிகிதத்தை நிதியுதவி செய்துள்ளார் ஜெய்தேவ் உனாத்கத்.
 

இந்தியாவில் கொரோனா 2ம் அலை அதிதீவிரமாக பரவிவருகிறது. தினமும் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவதால், கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. மருத்துவ வசதிகள், ஆக்ஸிஜன் தேவை ஆகியவற்றை பூர்த்தி செய்ய இந்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

கொரோனா 2ம் அலை ஏற்படுத்தியுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியில் சில மணி நேரங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், கொரோனா சவால்களையும் கடந்து ஐபிஎல் தொடரை பிசிசிஐ வெற்றிகரமாக நடத்திவருகிறது.

இந்தியா எதிர்கொண்டுள்ள பிரச்னையில் தங்களது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று விரும்பும் ஐபிஎல் வீரர்கள் மற்றும் அணிகள் நிதியுதவி செய்துவருகின்றன. கேகேஆர் அணியில் ஆடும் ஆஸி., ஆல்ரவுண்டர் பாட் கம்மின்ஸ் தான் நிதியுதவியை தொடங்கிவைத்தார். பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.37 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார் கம்மின்ஸ். அவரை தொடர்ந்து முன்னாள் ஆஸி., வீரர் பிரெட் லீ ரூ.41 லட்சம் வழங்கினார்.

உள்நாட்டு வீரர்களான ஷெல்டான் ஜாக்சன், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி ஆகியோரும் தங்களால் முடிந்த நிதியுதவி செய்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ரூ.7.5 கோடியும், டெல்லி கேபிடள்ஸ் அணி சார்பில் ரூ.1.5 கோடியும் நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத், தனது ஐபிஎல் ஊதியத்தில் 10 சதவிகிதத்தை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஜெய்தேவ் உனாத்கத்தின் ஐபிஎல்  ஒப்பந்த ஊதியம் ரூ.8.4 கோடி ஆகும். அதில் 10 சதவிகிதத்தை வழங்குவதாக உனாத்கத் தெரிவித்துள்ளார்.
 

click me!