ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவிற்கு எதிராக இன்று பெங்களூருவில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஜெயிப்பதற்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா பரபரப்பாகவும், அதிரடியாகவும் நடந்து வருகிறது. இதில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த சீசனில் 3 போட்டிகளில் விளையாடில் ஒன்றில் மட்டுமே பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் மும்பைக்கு எதிராக பெங்களூருவில் நடந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு பெங்களூருவில் லக்னோவிற்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மேலும், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தாவிற்க் எதிரான போடியில் பெங்களூரு அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதே போன்று டெல்லி கேப்டல்ஸ் ஹோம் மைதானத்திலும், மற்ற மைதானங்களிலும் நடந்த 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இன்று பெங்களூருவில் நடக்கும் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரையில் இரு அணிகளும் 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், 18 போட்டிகளில் பெங்களுரு அணியும், 10 போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. கடந்த 2020 ஆம் ஆண்டு சீசனிலிருந்து டெல்லி அணிக்கு எதிரான போட்டிகளில் பெங்களூரு அணி தோல்வி அடைந்தது இல்லை. இவ்வளவு ஏன், கடைசியாக டெல்லிக்கு எதிராக பெங்களூருவில் நடந்த போட்டியில் பெங்களூரு அணியே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 2020 ஆண்டு சீசனில் இருந்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி தோல்வியை சந்தித்தது இல்லை. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணியே வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த போட்டியில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 11 போட்டிகளில் பெங்களூரு 6 போட்டியிலும், டெல்லி 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
IPL 2023: வீணாய் போனது நிதிஷ் ராணா, ரிங்குவின் அதிரடி ருத்ரதாண்டவம்; கொல்கத்தாவில் சிக்ஸர் மழை!
ஆனால், இதுவரையில் நடந்த போட்டிகளில் ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்துள்ளது. உதாரணத்திற்கு நேற்றைய போட்டியையும், சென்னை போட்டியையும் கூட சொல்லலாம். இந்த ஐபிஎல் சீசன் ஆரம்பித்த போட்டிகளில் முதல் 9 போட்டிகளில் ஹோம் மைதானங்களில் அந்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், அடுத்த 7 போட்டிகளுக்கு மேலாக ஹோம் மைதானங்களில் நடந்த போட்டிகளில் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.
அதுவும் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால், கடைசியாக நடந்த லக்னோவிற்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி தனது சொந்த மைதானத்தில் தோல்வியை தழுவியது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உத்தேச ஆடும் 11:
விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ், அனுஷ் ராவத் அல்லது மஹிபால் ரோம்ரார், கிளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், கரன் சர்மா, முகமது சிராஜ்.
டெல்லி கேபிடல்ஸ் உத்தேச ஆடும் 11:
டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோஸவ் அல்லது ரோவ்மன் பவல், அக்ஷர் படேல், லலித் யாதவ், அபிஷேக் போரெல், குல்தீப் யாதவ், ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, கலீல் அகமது அல்லது முகேஷ் குமார்.