மளமளவென சரிந்த விக்கெட்; கிருஷ்ணப்பா கௌதம் 23, அமித் மிஷ்ரா 19 ரன்கள்; கேஎல் ராகுல் கடைசில வந்தும் பலனில்லை!

By Rsiva kumar  |  First Published May 1, 2023, 11:58 PM IST

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 43ஆவது போட்டி தற்போது லக்னோவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாப் டூப்ளெசிஸ் 44 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 31 ரன்கள் சேர்த்தார். தினேஷ் கார்த்திக் 16 ரன்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் ஒற்றைப்படையில் ஆட்டமிழந்தனர்.

அப்படி என்னத்த கிழிச்சிட்டாருன்னு இவர டீமுல வச்சிருக்காங்க? தீபக் கூடா மொத்தமே 53 ரன்னு தான்!

Tap to resize

Latest Videos

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹாக், அமித் மிஸ்ரா மற்றும் யாஷ் தாகூர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேஷாய், வணிந்து ஹசரங்கா, கரண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹசல்வுட்

ஒவ்வொரு ரன்னாக ஓடி ஓடி எடுத்த ஆர்சிபி: ஆறுதல் கொடுத்த பாப் டூப்ளெசிஸ்: மொத்தமே 2 சிக்ஸர், 6 பவுண்டரி தான்!

பின்னர் எளிய இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். காயம் காரணமாக பீல்டிங் செய்யாமல் வெளியேற லக்னோ அணியின் யாஷ் தாக்கூருக்குப் பதிலாக இம்பேக்ட் பிளேயராக ஆயுஷ் பதோனி தொடக்க வீரராக களமிறங்கினார். மற்றொரு தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குர்ணல் பாண்டியா ஹாட்ரிக் பவுண்டரி அடித்த நிலையில், சிக்ஸருக்கு அடிக்க முயற்சித்து விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மழை குறுக்கீடு காரணமாக போட்டி நிறுத்தம்: 15.2 ஓவர்களில் ஆர்சிபி 92 ரன்கள்!

மேக்ஸ்வெல் தனது முதல் ஓவரிலேயே குர்ணல் பாண்டியா விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து இம்பேக்ட் பிளேயர் ஆயுஷ் பதோனி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து தீபக் கூடா ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். அவர் ஒரேயொரு ரன் மட்டுமே எடுத்தார். அதன் பிறகு நிக்கோலஸ் பூரன் 9, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 13, கிருஷ்ணப்பா கௌதம் 23, ரவி பிஷ்னாய் 5, நவீன் உல் ஹாக் 13, அமித் மிஷ்ரா 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த கேஎல் ராகுல் களத்தில் இருந்தார்.

டெஸ்ட் போட்டி போன்று விளையாடும் ஆர்சிபி; 7 ஓவர்களாக எந்த பவுண்டரியும், சிக்ஸரும் இல்லை!

இறுதியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலமாக 2ஆவது முறையாக குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதற்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 135 ரன்களை சேஷிங் செய்ய முடியாமல் 7 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோல்வியடைந்தது.

இந்த தோல்வியின் மூலமாக லக்னோவில் நடந்த 5 போட்டிகளில் 3ல் லக்னோ அணி தோல்வியை தழுவியுள்ளது. ஆர்சிபி இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்துள்ளது. 9 போட்டிகளில் 5ல் வெற்றியும், 4ல் தோல்வியும் அடைந்துள்ளது. லக்னோ அணி 3ஆவது இடத்தில் உள்ளது.

பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம்; வலியால் துடித்த கேஎல் ராகுல்!

click me!