லக்னோவிற்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி விளையாடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கீடு இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான இன்றைய 43ஆவது போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் ரன் கணக்கை தொடங்கினர். பவர்பிளே என்று சொல்லக் கூடிய முதல் 6 ஓவருக்கு ஆர்சிபி அணி 42 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இறங்கி அடிக்கிறேன் என்ற பெயரில் விராட் கோலி, ரவி பிஷ்னாய் பந்தில் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார்.
டெஸ்ட் போட்டி போன்று விளையாடும் ஆர்சிபி; 7 ஓவர்களாக எந்த பவுண்டரியும், சிக்ஸரும் இல்லை!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:
கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் கூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்ணல் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணப்பா கௌதம், ரவி பிஷ்னாய், நவீன் உல் ஹாக், அமித் மிஸ்ரா மற்றும் யாஷ் தாகூர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி, பாப் டூப்ளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுயாஷ் பிரபுதேஷாய், வணிந்து ஹசரங்கா, கரண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹசல்வுட்
பவுண்டரியை தடுக்க ஓடிய போது காலில் காயம்; வலியால் துடித்த கேஎல் ராகுல்!
அவர் 43 ரன்கள் சேர்த்தால் ஐபிஎல் வரலாற்றில் 7000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் 30 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில், 3 பவுண்டரி அடங்கும். அடுத்து வந்த அனுஜ் ராவத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு வந்த பிரபுதேசாய் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். 7 ஓவர்களாக எந்த பவுண்டரியும், சிக்ஸரும் அடிக்காமல் ஆர்சிபி அணி டெஸ்ட் போட்டியை விட மிகவும் மோசமாக ஆடி வருகிறது.
டேவிட் வில்லிக்குப் பதிலாக களமிறங்கும் கிரிக்கெட் வர்ணனையாளர் கேதர் ஜாதவ்!
தற்போது பாப் டூப்ளெசிஸ் மட்டும் கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஆடி வருகிறார். 15.2 ஓவரின் போது மழை குறுக்கீடு இருந்ததால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. எனினும், 15 நிமிடங்களாக மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், போட்டியில் ஓவர்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. ஓவர்கள் குறைக்கப்பட்டால் அது ஆர்சிபி அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரையில் ஆர்சிபி அணி 15.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடனும், பாப் டூப்ளெசிஸ் 40 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.