RCB vs SRH: சன்ரைசர்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் கம்பேக்..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan VFirst Published Apr 23, 2022, 2:49 PM IST
Highlights

ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று இரவு மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் ஆர்சிபியும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத்தும் மோதுகின்றன. 

ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஆகிய 2 அணிகளுமே இந்த சீசனில் அபாரமாக விளையாடி வெற்றிகளை குவித்துவருகின்றன. இதுவரை ஆர்சிபி ஆடிய 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் ஆடிவரும் ஆர்சிபி, டுப்ளெசிஸின் கேப்டன்சியில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் வலுவான நல்ல பேலன்ஸான அணியாக திகழ்கிறது.

கோலி சரியாக ஆடவில்லை என்றாலும், டாப் ஆர்டரில் ஃபாஃப், மிடில் ஆர்டரில் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது ஆகியோர் சிறப்பாக ஆடுகின்றனர். தினேஷ் கார்த்திக் ஃபினிஷிங்கில் மிரட்டுகிறார். ஆர்சிபி அணிக்காக போட்டிகளை வெற்றிகரமாக முடித்துக்கொடுக்கிறார் தினேஷ் கார்த்திக். பவுலிங்கிலும் ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா ஆகியோர் வலுசேர்க்கின்றனர். எனவே ஒரு முழுமையான, வலுவான அணியாக திகழும் ஆர்சிபி அணியில் எந்த மாற்றமும் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை. அதனால் கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் ஆர்சிபி அணி களமிறங்கும்.

உத்தேச ஆர்சிபி அணி:

அனுஜ் ராவத், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

சன்ரைசர்ஸ் அணியும் இந்த சீசனில் அருமையாக ஆடிவருகிறது. முதல் 2 போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 4 போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. கேன் வில்லியம்சன் தலைமையில் புவனேஷ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் பவுலிங்கில் பட்டைய கிளப்ப, பேட்டிங்கில் திரிபாதி, மார்க்ரம், பூரன் அடி வெளுக்க, சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை குவித்துவருகிறது.

காயத்தால் கடந்த சில போட்டிகளில் ஆடாத வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆடினால் ஜெகதீஷா சுஜித் நீக்கப்படலாம். சுந்தர் ஆடவில்லை என்றால், சுஜித் ஆடுவார்.

உத்தேச சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஜெகதீசா சுஜித்/வாஷிங்டன் சுந்தர், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன்.
 

click me!