உலக கோப்பை அணியில் ஓரங்கட்டப்பட்ட கடுப்பில் விஜய் சங்கரின் தேர்வை நக்கல் செய்த ராயுடு

Published : Apr 18, 2019, 10:58 AM IST
உலக கோப்பை அணியில் ஓரங்கட்டப்பட்ட கடுப்பில் விஜய் சங்கரின் தேர்வை நக்கல் செய்த ராயுடு

சுருக்கம்

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.   

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்க உள்ள நிலையில், உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இந்திய அணி கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது. 

நீண்ட இழுபறியில் இருந்த 4ம் வரிசை வீரருக்கான இடத்திற்கு விஜய் சங்கரையும் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் தேர்வு செய்திருந்தது தேர்வுக்குழு. 4ம் வரிசையில் ராயுடு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கடைசி இரண்டு தொடர்களில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் அசத்தி கடைசி நேரத்தில் உலக கோப்பை அணியில் இடம்பிடித்துவிட்டார் விஜய் சங்கர். அதனால் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் நம்பியிருந்த ராயுடுவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

ராயுடுவை ஒதுக்கிவிட்டு விஜய் சங்கரை தேர்வு செய்தது குறித்து விளக்கமளித்த தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், தற்போதைய ஃபார்மின் அடிப்படையில் ராயுடுவை விட விஜய் சங்கர் தான் சரியான தேர்வு. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே சிறப்பாக செயல்படக்கூடிய முப்பரிமாண(3 டைமன்ஷனல் - 3டி) வீரர் அவர். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் அணிக்கு தேவைப்படும்போது பவுலிங்கும் வீசக்கூடியவர். 

24விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டிருப்பதன் மூலம் இந்திய அணிக்கு 7 பவுலிங் ஆப்சன் உள்ளது. அதுமட்டுமல்லாமல் விஜய் சங்கர் சிறந்த ஃபீல்டர். இவ்வாறு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட்டார். அண்மைக்காலத்தில் ராயுடுவை விட சிறப்பாக ஆடி தனது திறமையை நிரூபித்துள்ளார் விஜய் சங்கர். இதுதான் விஜய் சங்கர் அணியில் எடுக்கப்பட காரணம் என்று எம்.எஸ்.கே.பிரசாத் விளக்கமளித்திருந்தார். 

தன்னை ஓரங்கட்டிய கடுப்பில் இருந்த ராயுடு, விஜய் சங்கர் ஒரு 3 டைமன்ஷனல் வீரர் என்று பிரசாத் தெரிவித்திருந்ததை குறிப்பிட்டு கிண்டலாக டுவீட் செய்துள்ளார். உலக கோப்பையை காண இப்போதுதான் 3டி கண்ணாடி ஆர்டர் செய்துள்ளதாக ராயுடு பதிவிட்டுள்ளார். விஜய் சங்கரின் தேர்விற்கு சொல்லப்பட்ட காரணத்தை கிண்டல் செய்யும் விதமாக இந்த பதிவை இட்டுள்ளார் ராயுடு. 

PREV
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!