10 வருஷத்துக்கு பிறகு நேரடியா உலக கோப்பை அணியில் இணைந்த வீரர்!! உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. ஆர்ச்சர், சாம் கரன் இல்லை

By karthikeyan VFirst Published Apr 18, 2019, 9:55 AM IST
Highlights

15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இந்த அணியில், பேர்ஸ்டோ, ராய், ரூட், ஸ்டோக்ஸ், வோக்ஸ், பட்லர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அனைத்து அணிகளும் ஒவ்வொன்றாக 15 வீரர்களை கொண்ட தங்களது அணியை அறிவித்துவருகிறது. 

உலக கோப்பைக்கான அணியை முதல் ஆளாக நியூசிலாந்து அறிவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதல் அணியாக பார்க்கப்படும் இங்கிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளாக பார்க்கப்படுகின்றன. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பதால், அந்த அணிக்கு சற்று கூடுதல் வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதுவரை உலக கோப்பையை வென்றிராத இங்கிலாந்து அணி, முதன்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, கடந்த சில ஆண்டுகளாக ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணி வலுவாக திகழ்வதால் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ளது. 

இந்நிலையில், 15 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இந்த அணியில், பேர்ஸ்டோ, ராய், ரூட், ஸ்டோக்ஸ், வோக்ஸ், பட்லர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அபாரமாக பந்துவீசிவரும் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஆகியோருக்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. 

அதேநேரத்தில் 2009ம் ஆண்டு தனது கடைசி ஒருநாள் போட்டியை ஆடிய ஜோ டென்லி 10 ஆண்டுகளுக்கு அணியில் எடுக்கப்பட்டுள்ளார்; அதுவும் நேரடியாக உலக கோப்பை அணியில் எடுக்கப்பட்டுள்ளார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பைக்கு முன்னதாக நடக்கும் தொடரில் ஆர்ச்சர் இங்கிலாந்து அணியில் இருக்கிறார். அப்படியிருக்கையில், உலக கோப்பை அணியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். 

உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி:

இயன் மோர்கன்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், பிளன்கெட், அடில் ரஷீத், டேவிட் வில்லி, அலெக்ஸ் ஹேல்ஸ், டாம் கரன், மார்க் உட், ஜோ டென்லி. 
 

click me!