Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் கபில் தேவின் சாதனையை தகர்த்தார் அஷ்வின்

Published : Mar 06, 2022, 05:15 PM IST
Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் லெஜண்ட் கபில் தேவின் சாதனையை தகர்த்தார் அஷ்வின்

சுருக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் சாதனையை தகர்த்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.  

இந்திய அணியின் சீனியர் வீரரும், சமகால கிரிக்கெட்டின் டாப் ஸ்பின்னருமான ரவிச்சந்திரன் அஷ்வின் 84 டெஸ்ட் போட்டிகளில் 430 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த நிலையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டை 85வது டெஸ்ட் போட்டியாக விளையாடினார்.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் அடித்து முடல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 175 ரன்களையும், ரிஷப் பண்ட் 96 ரன்களையும், அஷ்வின் 61 ரன்களையும் குவித்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 174 ரன்களுக்கு சுருண்டது. ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, 2வது இன்னிங்ஸிலும் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் வீழ்த்திய அஷ்வின், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட் வீழ்த்தினார். மொத்தமாக இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அஷ்வின். 2வது இன்னிங்ஸில் சாரித் அசலங்காவின் விக்கெட் அஷ்வினின் 435வது சர்வதேச டெஸ்ட் விக்கெட். அந்த விக்கெட்டின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவின் 434 விக்கெட்டுகள் என்ற சாதனையை முறியடித்து முந்திச்சென்றார் அஷ்வின்.

436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் கபில் தேவை (434) பின்னுக்குத்தள்ளி, அனில் கும்ப்ளேவிற்கு (619) அடுத்த 2வது இடத்தை பிடித்துள்ளார் அஷ்வின். 85 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் 434 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்பின்னர்கள் பட்டியலில் இலங்கையின் ரங்கனா ஹெராத்தை (433) பின்னுக்குத்தள்ளி 4ம் இடத்தை பிடித்துள்ளார் அஷ்வின். முதல் 3 இடங்களில் முறையே முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன் மற்றும் அனில் கும்ப்ளே ஆகிய 3 லெஜண்ட் ஸ்பின்னர்கள் உள்ளனர்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!