#INDvsENG டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் 2ம் இடத்தில் அஷ்வின்

By karthikeyan VFirst Published Feb 15, 2021, 11:23 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரே போட்டியில் அதிமுறை 5 விக்கெட்டும் வீழ்த்தி, சதமும் அடித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார் அஷ்வின்.
 

இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அஷ்வின் சுழலில் வெறும் 134 ரன்களுக்கு சுருண்டது.

இந்திய அணியின் சார்பில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வினின் 29வது 5  விக்கெட் இன்னிங்ஸ்.

195 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 106 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. கோலியுடன் இணைந்து சிறப்பாக ஆடிய அஷ்வின், கோலி 62 ரன்னில் ஆட்டமிழந்த பிறகும், தொடர்ந்து சிறப்பாக ஆடி சதமடித்தார். 106 ரன்களுக்கு கடைசி விக்கெட்டாக அஷ்வின் ஆட்டமிழந்தார். அஷ்வினின் அதிரடி சதத்தால் 2வது இன்னிங்ஸில் 286 ரன்களை குவித்த இந்திய அணி, 482 ரன்கள் என்ற கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.

இந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் சதமும் அடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின், பவுலிங்கில் 5 விக்கெட்டும் வீழ்த்தி பேட்டிங்கில் சதமும் அடிப்பது இது 3வது முறை. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை இந்த சம்பவத்தை செய்த வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் இயன் போத்தமிற்கு(5) அடுத்த இடத்தில் அஷ்வின்(3) உள்ளார்.
 

click me!