Ravichandran Ashwin: எனக்கு ரொம்ப பிடித்த பாகிஸ்தான் வீரர்கள் இந்த 3 பேரும் தான்..! அஷ்வின் ஓபன் டாக்

Published : Dec 20, 2021, 05:55 PM IST
Ravichandran Ashwin: எனக்கு ரொம்ப பிடித்த பாகிஸ்தான் வீரர்கள் இந்த 3 பேரும் தான்..! அஷ்வின் ஓபன் டாக்

சுருக்கம்

சமகால கிரிக்கெட்டில் தனக்கு மிகவும் பிடித்த 3 பாகிஸ்தான் வீரர்கள் யார் யார் என்று ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியுள்ளார்.  

சமகாலத்தின் தலைசிறந்த ஸ்பின்னர்களில் ஒருவர் ரவிச்சந்திரன் அஷ்வின். ஆல்டைம் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக கண்டிப்பாக நினைவுகூரப்படுவார் அஷ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் 427 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய 3வது இந்திய பவுலர்  என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இன்னும் 8 விக்கெட் வீழ்த்தினால், கபில் தேவை முந்திவிடுவார் அஷ்வின்.

டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணியுடன் சுற்றுப்பயணம் சென்றுள்ள ரவிச்சந்திரன் அஷ்வின், சமகாலத்தில் தனக்கு மிகவும் பிடித்த 3 பாகிஸ்தான் வீரர்கள் யார் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து கூறிய அஷ்வின், நான் முகமது ரிஸ்வானை தொடர்ச்சியாக பார்த்துவருகிறேன். ரிஸ்வானின் மிகச்சிறந்த, தரமான பேட்டிங்கை பற்றி தொடர்ந்து பேசியும் வந்திருக்கிறேன். முக்கியமான பல இன்னிங்ஸ்களை ஆடியிருக்கிறார் ரிஸ்வான். பாபர் அசாம் மிகச்சிறந்த வீரர். ஆஸ்திரேலியாவில் பாபர் அடித்த சதம் அபாரமானது. அடுத்தது ஷாஹீன் அஃப்ரிடி; ரியல் டேலண்ட். பாகிஸ்தான் எப்போதுமே மிகச்சிறந்த கிரிக்கெட்டர்களை கொண்டிருந்திருக்கிறது. இப்போதும் அனைவரும் திறமையானவர்கள். ஆனால் அவர்களில் இவர்கள் மூவரும் மிகச்சிறந்தவர்கள் என்று அஷ்வின் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாம் - முகமது ரிஸ்வான் ஜோடி டி20 கிரிக்கெட்டில் பல சாதனைகளை தகர்த்து புதிய மைல்கற்களை எட்டிவருகிறது. அண்மையில் கூட, ரோஹித் - ராகுலின் சாதனையை தகர்த்தது பாபர் - ரிஸ்வான் ஜோடி. பாபர் அசாம் சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி - ஜோ ரூட் - கேன் வில்லியம்சன் - ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் வரிசையில் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். பாபர் அசாம் - ரிஸ்வான் ஜோடி அபாரமாக பேட்டிங் ஆடி சர்வதேச அரங்கில் எதிரணிகளை தெறிக்கவிட்டுவருகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் கூட, விக்கெட்டே இழக்காமல் அவர்கள் இருவருமே இலக்கை எட்டி போட்டியை முடித்தனர். அதேபோல, பாகிஸ்தான் அணியின் பவுலிங்கிற்கு பலம் சேர்ப்பவர் ஷாஹீன் அஃப்ரிடி.

அந்தவகையில், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் மற்றும் ஷாஹீன் அஃப்ரிடி ஆகிய மூவரையும் தனது ஃபேவரைட் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என தெரிவித்துள்ளார் அஷ்வின்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!