Amazon Prime: அமேசான் பிரைமின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. 2022ம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமேசான் பிரைமில் கிரிக்கெட் நேரலை

Published : Dec 20, 2021, 05:03 PM IST
Amazon Prime: அமேசான் பிரைமின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. 2022ம் ஆண்டு ஜனவரி 1 முதல் அமேசான் பிரைமில் கிரிக்கெட் நேரலை

சுருக்கம்

2022ம் ஆண்டு ஜனவரி 1 முதல் நியூசிலாந்தில் ஆடப்படும் கிரிக்கெட் போட்டிகல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரலை செய்யப்படும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது.  

ஓடிடி தளங்களில் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு நேரடியாக திரைப்படங்கள் வெளியிடப்பட்டுவருகின்றன. ஓடிடி தளங்கள் தவிர்க்க முடியாத தொழில்நுட்ப சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்ததாக ஓடிடி தளங்களில் நேரலையாக கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பு தொடங்குகிறது.

ஓடிடி-யில் கிரிக்கெட் நேரலையை தொடங்கிவைக்கிறது அமேசான் பிரைம். அமேசான் பிரைம் நிறுவனம் கிரிக்கெட் நியூசிலாந்துடன் (நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்) ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, வரும் 2022ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நியூசிலாந்தில் ஆடப்படும் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் அமேசான் பிரைமில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

நியூசிலாந்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் தொடர் தான் அமேசான் பிரைமில் நேரலையாக ஒளிபரப்பாகும் முதல் கிரிக்கெட் தொடர். அடுத்ததாக இந்தியா - நியூசிலாந்து இடையேயான மகளிர் கிரிக்கெட் தொடரையும் அமேசான் பிரைமில் பார்க்கலாம். 

2022ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தொடரையும் அமேசான் பிரைமிலேயே பார்க்கமுடியும். 

திரைப்படங்களை வாங்கி நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்துவந்த அமேசான் பிரைம், அடுத்தகட்ட நகர்வாக ஓடிடியில் கிரிக்கெட் தொடரையும் ஒளிபரப்பும் புதிய முன்னெடுப்பை தொடங்கிவைத்துள்ளது. அடுத்தடுத்து மற்ற ஓடிடி தளங்களும் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புக்கான உரிமங்களை பெற முயற்சிக்கும்.

PREV
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!