இங்கிலாந்துக்கு எதிரான 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அஸ்வினுக்கு 100ஆவது டெஸ்ட் போட்டிக்கான சிறப்பு கேப்-ஐ தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழங்கியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றூம் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது தரம்சாலாவில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் தங்களது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகின்றனர்.
அஸ்வின் 313 இந்திய டெஸ்ட் வீரர்களில் 14ஆவது வீரராக 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். அவருக்கு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் 100ஆவது டெஸ் போட்டிக்கான சிறப்பு கேப் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அப்போது அவருடன் அவரது மனைவி மற்றும் மகள்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011 ஆம் ஆண்டுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் அறிமுகமானார். அதுமட்டுமின்றி 37 வயதான கிரிக்கெட் வீரராக அஸ்வின் 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்.
முதல் மற்றும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட அஸ்வின் 12 வருடம் 4 மாதம் மற்றும் ஒரு நாள் எடுத்துக் கொண்டுள்ளார். 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின் 507 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்திற்கு எதிராக மட்டுமே அஸ்வின் 105 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்.
ஒரு அணிக்கு எதிராக அஸ்வின் கைப்பற்றிய விக்கெட்டுகள்:
ஆஸ்திரேலியா – 114
இங்கிலாந்து – 105
வெஸ்ட் இண்டீஸ் – 75
நியூசிலாந்து – 66
இலங்கை – 62
தென் ஆப்பிரிக்கா – 57
வங்கதேசம் – 23
ஆப்கானிஸ்தான் 5
அஸ்வின் கைப்பற்றிய 507 விக்கெட்டுகளில் 354 விக்கெட்டுகள் இந்திய மைதானங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் எடுத்துள்ளார். மேலும் அனில் கும்ப்ளே 350, ஹர்பஜன் சிங் 265, கபில் தேவ் 219 விக்கெட்டுகள் எடுத்துள்ளனர்.
இந்தியா - 59 போட்டிகள் – 354 விக்கெட்டுகள் – 27 முறை 5 விக்கெட்டுகள் – 6 முறை 10 விக்கெட்டுகள்
வெஸ்ட் இண்டீஸ் – 6 போட்டிகள் – 71 விக்கெட்டுகள்
இலங்கை – 6 போட்டிகள் – 38 விக்கெட்டுகள்
வங்கதேசம் – 3 போட்டிகள் – 12 விக்கெட்டுகள்
ஒரு வீரரை அதிக முறை விக்கெட்டுகள்
பென் ஸ்டோக்ஸ் – 12 முறை
டேவிட் வார்னர் – 11
அலாஸ்டைர் குக் – 9
டாம் லாதம் – 8