IND vs NZ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் ரெக்கார்டை தகர்த்த Ravichandran Ashwin

Published : Nov 29, 2021, 03:22 PM IST
IND vs NZ டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங் ரெக்கார்டை தகர்த்த Ravichandran Ashwin

சுருக்கம்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கின் சாதனையை தகர்த்து, கபில் தேவ், அனில் கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்த இடத்தை பிடித்து அசத்தியுள்ளார் அஷ்வின்.  

இந்தியா - நியூசிலாந்து இடையே கான்பூரில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸிலேயே சதமடித்து சாதனை படைத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி, தொடக்க வீரர்கள் டாம் லேதம் (95) மற்றும் வில்  யங் (89) ஆகிய இருவரின் பொறுப்பான பேட்டிங்கால் முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் அடித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 51 ரன்களுக்கே கில் (1), மயன்க் அகர்வால் (17), புஜாரா (22), ரஹானே (4), ஜடேஜா (0) ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் (65), அஷ்வின் (32) மற்றும் ரிதிமான் சஹா (61) ஆகியோர் பொறுப்புடன் ஆடியதால், 7 விக்கெட்டுக்கு மேல் இந்திய அணி இழக்கவில்லை. 2வது இன்னிங்ஸில் 234 ரன்கள் அடித்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்றதால் 283 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 284 ரன்களை நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது.

4ம் நாள் ஆட்டத்தின் கடைசி 4 ஓவர்கள் எஞ்சிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங்கை வெறும் 2 ரன்னில் 3வது ஓவரில் வீழ்த்தினார் அஷ்வின். நைட் வாட்ச்மேனாக இறங்கிய சோமர்வில் கடைசி நாளான இன்றறைய ஆட்டத்தில் சீக்கிரம் ஆட்டமிழக்காமல் 110 பந்துகள் பேட்டிங் ஆடி நேரத்தையும் பந்துகளையும் கடத்தினார். ஒருவழியாக அவரை 36 ரன்னில் உமேஷ் யாதவ் வீழ்த்த, அரைசதம் அடித்த டாம் லேதமை 52 ரன்னில் அஷ்வின் வீழ்த்தினார். அதன்பின்னர் டீ பிரேக்கிற்கு முந்தைய கடைசி ஓவரில் ரோஸ் டெய்லரை (2) ஜடேஜா வீழ்த்த, கடைசி செசன் தொடங்கிய மாத்திரத்தில் ஹென்ரி நிகோல்ஸை அக்ஸர் படேல் வீழ்த்தினார். கேன் வில்லியம்சனையும் ஜடேஜா வீழ்த்த, 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நியூசிலாந்துஅணி டிராவிற்கு போராடிவருகிறது.

இந்த போட்டியில் 2வது இன்னிங்ஸில் டாம் லேதமின் விக்கெட்டை அஷ்வின் வீழ்த்திய நிலையில், அது அஷ்வினின்ன் 418வது டெஸ்ட் விக்கெட். இந்த விக்கெட்டின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் அஷ்வின்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில், 619 விக்கெட்டுகளுடன் அனில் கும்ப்ளே முதலிடத்திலும், 434 விக்கெட்டுகளுடன் கபில் தேவ் 2ம் இடத்திலும் உள்ளனர். 417 விக்கெட்டுகளுடன் ஹர்பஜன் சிங் 3வது இடத்தில் இருந்த நிலையில், 418 விக்கெட்டுகளுடன் அஷ்வின் 3ம் இடத்திற்கு முன்னேறி, ஹர்பஜனை 4ம் இடத்திற்கு தள்ளினார்.

190 இன்னிங்ஸ்களில் ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஆனால் வெறும் 150 இன்னிங்ஸ்களில் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹர்பஜனை பின்னுக்குத் தள்ளியுள்ளார் அஷ்வின்.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்.. மின்னல் வேக சதம்.. 433 ரன்கள் குவிப்பு.. பிரமிக்க வைத்த இந்தியா!
IND VS SA 3வது டி20.. சுப்மன் கில் அதிரடி நீக்கம்?.. சிஎஸ்கே வீரர் கம்பேக்.. பிளேயிங் லெவன் இதோ!