
Ravichandran Ashwin Arguing With Umpire : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா முடிந்த நிலையில் இப்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் என்று சொல்லப்படும் டிஎன்பிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. கோவை மைதானத்தில் நடைபெற்ற இன்றைய போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சாய் கிஷோர் தலைமையிலான ஐ டிரீம்ஸ் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதின.
டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. திருப்பூர் அணியின் கேப்டன் சாய் கிஷோர் வீசிய 5வது ஓவரில் ஐந்தாவது பாலில் LPW முறையில் ஆட்டம் இழந்தார். பிக்சிங் அவுட் சைட் லெக்கில் குத்திய பந்து காலில் பட்டால் விதிமுறைப்படி அவுட் கொடுக்கக் கூடாது. ஆனால் அஸ்வின் ரிவ்யூ எடுக்காமல் களத்தை விட்டு வெளியேறினார். ஒருவேளை அவர் ரிவ்யூ எடுத்து இருந்தால் அவர் ஆட்டம் இழந்து இருக்க மாட்டார். நடுவரின் முடிவுக்கு எதிராக அஷ்வின் கிளவூசை தூக்கி வீசி கோபத்தை வெளிப்படுத்தினார்.
அஸ்வின் 11 பந்துக்கு 18 ரன்கள் அடித்திருந்தார். அஸ்வின் அவுட் கொடுத்த நடுவரின் பெயர் வெங்கடேசன் கிருத்திகா என்பது குறிப்பிடத்தக்கது.
Ravichandran Ashwin Controversy
https://x.com/StarSportsTamil/status/1931718072446157195